Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 9 March 2016

இன்றைய புனிதர் 2016-03-10 மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ

                      
                     இன்றைய புனிதர் 2016-03-10
மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ
பிறப்பு 1580, டுரும் Drum, ஸ்காட்லாந்து

இறப்பு 10 மார்ச் 1615, கிளாஸ்கோவ் Glasgow, ஸ்காட்லாந்து

புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1976, திருத்தந்தை 6 ஆம் பவுல்
இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை மரியா ஸ்டூவர்ட் Maria Stuart என்றதோர் பணியகத்தில் மேனேஜராகப் புரிந்தார். இவர் மிகத் திறமையானவர். யோஹானஸ் தனது 17 வயதிற்குள்ளேயே ஏராளமான பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றார். தனது 17 ஆம் வயதில் கத்தோலிக்க விசுவாசத்தில் திளைந்தார். இவர் திருத்தந்தையர்கள் கற்கும் பள்ளியில் சேர்ந்து தனது துறவற பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் 1599 ல் இயேசு சபையில் சேர்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் கிராஸ் Graz, ஆஸ்திரியா Austria நாடுகளில் மிக முக்கிய பணிகளுக்கு பொறுப்பேற்றார். 1610 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு மீண்டும் தன் தாய்நாடான ஸ்காட்லாந்திற்கு திரும்பினார். அதன்பிறகு எடின்பூர்க் என்ற இடத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய ஒருவரின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்தார். இவர் கத்தோலிக்க விசுவாசத்தை கண்ணும் கருத்துமாக இருந்து பரப்பினார். இதனால் பலமுறை சிறைபிடித்துச் செல்லப்பட்டார். இவர் 1614 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் மறைப்பரப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் சிறைபிடித்து செல்லப்பட்டார். கத்தோலிக்க் விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் இவர் அவ்விசுவாசத்தில் சிறிதும் தளராமல் சிறையிலும் போதித்தார். இதனால் இவர்மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு, இறப்பதர்கு ஆணை பிறப்பிக்கபட்டது. அவ்வாணையின் பேரில் இவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இவர்தான் இறக்கும்போது கடவுளை வழிப்பட்டு விட்டு மரித்தார்.


செபம்:
தேர்ந்து கொண்டவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா! தனது இறுதி மூச்சுவரை உம்மீது கொண்ட இறை விசுவாசத்தில் சிறிதும் தளராமல் உம்மை பற்றிகொள்ள புனித யோஹானசிற்கு அருள் கூர்ந்தீர். அவர் கொண்ட அவ்விசுவாச த்தை நாங்களும்
எம் வாழ்வில் பிரதிபலிக்க செய்தருள வாய் ப்பளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment