Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 31 August 2015
இன்றைய புனிதர் 2015-08-31 புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ் (St.Raymon Nonnatus OdeM)
புனிதர்பட்டம்: 1657, திருத்தந்தை 7 ஆம் அலெக்சாண்டர்
Saturday, 29 August 2015
இன்றைய புனிதர் 2015-08-30 புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
இறப்பு 1588,இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 1929, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்
பாதுகாவல்: கப்பல், படகு ஓட்டுநர்கள்
புனித மர்கரீத் வார்டு(Margaret Ward) மற்றும் அருள்தந்தை ரிச்சர்டு வாட்சன்(Richard Watson) ஆகிய இருவரும் மிகஸ் சிறப்பாக மறைப்பணியை செய்தனர். இதனால் கத்தோலிக்க திருச்சபையை பிடிக்காத புரட்டஸ்டாண்டு இங்கிலாந்து அரசி இருவரையும் பிடித்துச் சென்று சிறையலடைத்தார். இவர்கள் இருவரையும் யாருக்கும் தெரியாமல் ஒரு படகு மூலம் அவர்களை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்தார் புனித ஜான் ரோச். இதனை தெரிந்துகொண்ட அரசி அவரை சிறையில் அடைத்தார். இரண்டு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஒன்று, அரசியிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது புரட்டஸ்டாண்டு சபைக்கு மாறவேண்டும். இவ்விரு நிபந்தனைகளையும் மறுத்தார். இதனால் கோபங்கொண்ட அரசி அவரை தூக்கிட்டு கொன்றார்.
Friday, 28 August 2015
இன்றைய புனிதர் 2015-08-29 புனித திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்ட நாள் (The Beheading of St. John the Baptist)
யோவான் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தார். இதை அறிந்த ஏரோது அரசன் அவரை சிறையலடைத்தான் (எசாயா 49:1-2) ல் கூறுவதுபோல மறைசாட்சியாக மரித்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை" என்று கூறினார் (திருத்தூதர்பணி 13:23-25) ஏரோது அரசன் குடித்து, ஏரோதியாளின் நடனத்துக்கு அடிமையாகி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே, தன் காவலனை அனுப்பி சிறையிலிருந்த யோவானுடைய தலையை வெட்ட செய்தான். பின்னர் யோவானின் சீடர்கள் வந்து, அவரின் உடலை எடுத்து சென்றனர். ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது.
Thursday, 27 August 2015
இன்றைய புனிதர் 2015-08-28 புனித அகுஸ்தீன்/ அகுஸ்தினார் / அகஸ்டீன் St.Augustine ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு13 நவம்பர் 354 ,டாகஸ்டேTagaste, நுமிடியன் Numidien, (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு28 ஆகஸ்டு 430ஹிப்போ, நுமிடியன் Numidien,(இன்றைய அல்ஜீரியா
)
குருப்பட்டம்: 394
ஆயர்பட்டம்: 396, ஹிப்போ மறைமாவட்டம் Hippo, வட ஆப்ரிக்கா பாதுகாவல்: இறையியல் அறிஞர்கள்
புனித அகுஸ்தீன் தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி கழித்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படித்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார்.
மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் தம் மந்தைக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார்.
Wednesday, 26 August 2015
இன்றைய புனிதர் 2015-08-27 மோனிக்கா Monika புனித அகுஸ்தினாரின் தாயார
பிறப்பு 332, டாகஸ்டே Tagaste, நுமிடியன் Numidien (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு அக்டோபர் 387, ஓஸ்டியா Ostia, இத்தாலி
பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள் |
புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார்.
தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.
Tuesday, 25 August 2015
இன்றைய புனிதர் 2015-08-26 யேசுவின் புனித தெரசாள் Theresia von Jesus OSCI (Teresa Jornet y Ibars) கன்னியர்
பிறப்பு 9 ஜனவரி 1843 ஐடோனா Aytona, ஸ்பெயின்
இறப்பு 26 ஆகஸ்டு 1897 பார்பஸ்ட்ரோ Barbastro, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1958, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
புனிதர்பட்டம்: 27 ஜனவரி 1974 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் சிறுவயதிலிருந்தே பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை, எத்துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார்.
நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872 ஆம் ஆண்டு பார்பஸ்ட்ரோ(Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "ஏழைகளின் எளிய அருட்சகோதரிகள்"(Little sisters of poor) என்ற பெயரை சூட்டினார். ஏழையாக பிறந்து, வளர்ந்த தெரசா, தன் சபையையும் ஏழைகளுக்காகவே ஏற்படுத்தினார். இத்துறவற சபை முதலில் லெரிடா(Lerida) என்ற ஊரில் தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கான இச்சபை தெரசா இறக்கும்போது, 50 துறவற இல்லமாக பெருகி, வளர்ச்சி அடைந்தது.
இன்றைய புனிதர் 2015-08-25 புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
பிறப்பு 25 ஏப்ரல் 1219, பிரான்ஸ்
இறப்பு 25 ஆகஸ்டு 1270 துனிசியா புனிதர்பட்டம்: 1297, திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்
அரசராக: 1230, 11 வயதில்
பாதுகாவல்: முயூனிக், சார்ப்ர்யூக்கன், பெர்லின், பிரான்சிஸ்கன் 3 ஆம் சபைக்கு பாதுகாவலர் லூயிஸ் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் லூயிஸ் டி லையன்(Louid de Lion). இவரின் தாய் ப்லான்சே(Blanche). இவரின் தாத்தா பிரான்சு நாட்டு அரசர் இரண்டாம் பிலிப்பு. புனித லூயிஸ் 9 வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் திருமணம் செய்து, 11 குழந்தைகளை ஆண்டவரின் ஆசீரோடு பெற்றார். தன் குழந்தைகளை தானே சிறந்த முறையில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். கிறித்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர் மேற்கொண்டார். இவர் 1226 ஆம் ஆண்டிலிருந்து, தான் இறக்கும்வரை அரசராக இருந்தார். இவர் 1248 ஆம் ஆண்டு 7 வது சிலுவைப்போரையும், 1270 ஆம் ஆண்டு மீண்டும் 8 வது சிலுவைப்போரையும் நடத்தினார். இவர் அரசர்களிலேயே முதல் புனிதர் என்ற பெயர் பெற்றார்.
Monday, 24 August 2015
இன்றைய புனிதர் 2015-08-24 திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew மறைசாட்சி

பிறப்பு முதல் நூற்றாண்டு, கானா Cana, கலிலேயா
இறப்பு முதல் நூற்றாண்டு, சிரியா
பாதுகாவல்: ஃப்ராங்க்பர்ட், கொடிய நோய்களை தீர்க்க
இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர். இவர் ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது.
யோவான் நற்செய்தி 1:45-50 -ல் பின்வரும் இறைவாக்குகள் இவரை பற்றி மேலும் கூறுகிறது. "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை"
காண்பீர் என்றார்
Sunday, 23 August 2015
இன்றைய புனிதர் 2015-08-23 லீமா நகர் புனித ரோசா Rosa von Lima OSD திருக்காட்சியாளர்
பிறப்பு 20 ஏப்ரல் 1586, லீமா, பெரு,Peru
இறப்பு24 ஆகஸ்டு 1617, லீமா,Lima,பெரு,Peru
| |||
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்: தென் அமெரிக்கா
|
|||
இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் இவரோ இயேசுவை பின்பற்றி அவருக்காக வாழ விரும்பினார். புனித தோமினிக்கின் 3 ஆம் சபையில் சேர்ந்து, துறவற உடையை அணிந்து கொண்டார். தவ வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி, செபவாழ்வில் ஆழ்ந்து இருந்தார். இறைவனோடு
Saturday, 22 August 2015
இன்றைய புனிதர் 2015-08-22 புனித பிலிப்பு பெனிடியுஸ், Philippus Benitius OSM சபை நிறுவுனர்
பிறப்பு 15 ஆகஸ்டு 1233,புளோரன்ஸ் Florenz, இத்தாலிஇறப்பு 22 ஆகஸ்டு 1285,டோடி Todi, இத்தாலி
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை 10 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: சர்வைட் சபைக்கு
இவர் பெண்களுக்கான "சர்வைட்" Servites என்ற சபையை நிறுவினார். இவர் பாரிஸ் மற்றும் பதுவையில் Padua தனது மருத்துவ படிப்பையும், தத்துவயியல் படிப்பையும் படித்தார். தனது 19 ஆம் வயதில் சர்வைட் சபையில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1259 ல் குருப்பட்டம் பெற்றார். 1267 ல் சர்வைட் சபையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். தனது சபையை வலிமை பெற்ற சபையாக மாற்றினார். பின்னர் இத்தாலி ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று மிஷினரியாக பணியாற்றினார். அந்நாடுகளில் தன் சபையை பரப்பி, சில சர்வைட் துறவற இல்லங்களையும் கட்டினார்.
இவர் சிறப்பாக ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிபுரிந்தார். வாழ்வில் எதுவுமே இல்லையென்றுணர்ந்த மக்களை, தன் இதயத்தில் சுமந்து, வாழ்விற்கு வழிகாட்டினார். எண்ணிலடங்கா ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.
Friday, 21 August 2015
இன்றைய புனிதர் 2015-08-21 புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை St. Pius X திருத்தந்தை
பிறப்பு 2 ஜூன் 1835 ரீசே Riese, இத்தாலி
இறப்பு 20 ஆகஸ்டு 1914 ரோம், இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1951
புனிதர்பட்டம்: 29 மே 1954 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
திருவழிபாட்டு பாடல்கள், கிரகோரியன் பாடல்கள், பூசைபுத்தகம், கட்டளை செபங்கள் போன்றவற்றை புதுப்பித்தவர்நற்கருணையை விரைவில் பெற வழிவகுத்தவர் துறவறத்திற்கான படிப்பை புதுப்பித்தவர்
ஆயராக: 1884 மாண்டுவா மறைமாவட்டம் Mantua
திருத்தந்தையாக: 1903
இவர் ஓர் தொழிலாளியின்
குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். தவறாமல்
ஆலயம் சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து வந்தார். ஞானம் நிறைந்த இவர், ஆன்மீக
காரியங்களில் இரவு, பகலென்று பாராமல், அதிக அக்கறை காட்டி வந்தார். ஆலயப் பணிகள்
அனைத்தையும் மகிழ்ச்சியோடு செய்தார். பயஸ் 1858 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார்.
குருத்துவ நிலைக்கு உயர்த்தப் பெற்றபின், தம் பணியை சிறப்பாக செய்தார். தம்
பங்கிலிருந்த அனைத்துக்குடும்பங்களையும் சந்தித்து, கிறிஸ்துவ வாழ்வில்
வளர்த்தெடுத்தார். பல மணி நேரம் ஆலயத்தில் அமர்ந்து செபித்தார். நேரம் பாராமல்
பாவசங்கீர்த்தனம் கேட்டார். இவர் 1859 ஆம் ஆண்டு மாந்துவா(Manthu) நகரின் ஆயராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வெனிஸ் நகரத் திருச்சபையின் தலைமை ஆயராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் அவர்களால்
கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பிறகு 13 ஆம் சிங்கராயர்(Leo XIII) அவர்களின்
மறைவுக்குப்பின் 1903 ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஆட்சி பொறுப்பை
ஏற்றுக்கொண்டார். அதை வாழ்வில் நேர்மையை கடைபிடித்து , ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து,
மன உறுதியோடு நிறைவேற்றி வைத்தார். இவரின் பண்புகளால் மெய்யடியார்களிடையே
கிறிஸ்துவ வாழ்வை தூண்டி வளர்த்தார். திருச்சபைக்கு ஊறு விளைவித்த தவறான
கருத்துக்களுக்கு எதிராக, வீரத்துடன் நடவடிக்கை எடுத்தார். தான் பிறந்து, வளர்ந்த
ஏழ்மையான வாழ்வை விடாமல் கைபிடித்து வந்தார். மிகச் சிறப்பாக இறைப்பணியை செய்த
இவர், முதல் உலகப்போர் மூண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவ்வதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவர் தனது
இறுதிமூச்சுவரை கத்தோலிக்க மக்களை பாதுகாத்து, அவர்களை ஆழமான விசுவாசத்தில்
வளர்த்தெடுத்தார்.
Wednesday, 19 August 2015
இன்றைய புனிதர் 2015-08-20 புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvaux துறவி, மறைவல்லுநர்
பிறப்பு 1090 திஜோன்(Dijion), பிரான்சு
இறப்பு20, ஆகஸ்டு 1153 கிளார்வாக்ஸ்( Clairvaux) , பிரான்சு
புனிதர்பட்டம்: 18 ஜனவரி 1174 திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர் மறைவல்லுநராக: 1830, திருத்தந்தை எட்டாம் பயஸ் பாதுகாவல்: பேய்பிடித்தோர், குழந்தை நோயாளர்கள்
இவர் ஓர் அரசர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறந்த நன்னெறியில் இவரையும், இவரின் உடன்பிறந்தவர்களையும் வளர்த்தெடுத்தார்கள். சிஸ்டர்சியன்(Sistercien) சபையில் சேர்ந்து கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , சாதுவான வாழ்வை வாழ்ந்தவர். கடுமையான ஏழ்மையை தன் துறவற வாழ்வில் கடைபிடித்தார். தன் பெற்றோரின் வளர்ப்பை மறவாமல் செப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர் தன் உடன்பிறந்த சகோதரர்களும், தந்தையும் இவருடன் வாழ துறவற இல்லம் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்றிருந்த அனைத்தையுமே விற்று, மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். தனிமையான வாழ்வு, கடுமையான செபம், ஒறுத்தல் இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்தனர். அப்போது பிரான்சு நாட்டில் பரவிய "ஆல்பிஜென்ஸ்" என்ற கொள்கைகளை தைரியமாக எதிர்த்தனர். பெர்நார்டு எச்சவாலையும் தைரியமாக சந்தித்தார். மிக சிறந்த கிறிஸ்துவ மக்களை உருவாக்கினார். சிலுவைப் போரில் பணிபுரிய நல்ல கிறித்தவர்களை உருவாக்கினார். இவர்கள் விசுவாசத்தில் வளர, தன்னை முழுதும் கரைத்தார். பிறகு கிளேர்வே(Clarwo) என்ற ஆதீனத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகள் புண்ணியங்களை பேணி வளர்க்கும்படி, போதனைகளாலும், முன்மாதிரியாலும் சிறிய முறையில் வழி நடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் அதிகம் தோன்றியதால் ஐரோப்பா நாடு முழுவதும் பயணம் செய்தார். திருச்சபையின் அமைதி நிலவ பெரிதும் உழைத்தார். அச்சமயத்தில் இறையியலைப்பற்றியும், கடுந்தவம் பற்றியும், ஏழ்மை வாழ்வைப்பற்றியும் பல நூல்களை எழுதினார். இவரின் பயணத்தின்பியோது இவரால் தொடங்கப்பட்ட ஆதீன மடத்தில், இறைவேண்டல் செய்யும் வேளையில் இறந்தார்.
இன்றைய புனிதர் 2015-08-19 புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM) சபை நிறுவுனர்

பிறப்பு 14 நவம்பர் 1601ரீ Ri, அர்கெண்டான் Argentan, பிரான்ஸ்
இறப்பு19 ஆகஸ்டு 1680 சேன் Caen, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்:1909திருத்தந்தைபத்தாம்பயஸ்
புனிதர்பட்டம்: 31 மே 1925 திருத்தந்தை பதினோறாம் பயஸ்இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்தவராக திகழ்ந்தார். மிக தாழ்ச்சியோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று வந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தன் சிறுவயதிலிருந்தே, அன்போடு பராமரித்து, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். சிறுவயதிலிருந்தே அன்னைமரியிடமும், இயேசுவிடமும் மன்றாடி தன் கற்பை காத்து வந்தார். இயேசு சபை குருக்களிடம் கல்வி பயின்று தேர்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் இவரிடம் கொழுந்துவிட்டு எரிந்ததால் "பிரெஞ்ச் ஆரட்டரி" என்றழைக்கப்பட்ட சபையில் சேர்ந்து, குருத்துவ பயிற்சி பெற்றார். தியானங்கள் கொடுப்பதிலும், செபிப்பதிலும், வல்லவரான இவர் பல மணி நேரம், எவ்வித இடையூறும் இல்லாமல் இறைவனோடு ஒன்றிணைந்து செபித்தார்.
இவர் 1626 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் மறைப்பணியாளராகி பங்குகளுக்கு சென்று பல ஆண்டுகள் பணியாற்றினார். மறைப்பணியாளர்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டு, சிறந்த மறைப்பணியாளர்களை உருவாக்கினார். வழிதவறி அலைந்த பெண்களை ஒன்றுதிரட்டி, நல்வழிகாட்டி, வாழ்வை மாற்றி அமைத்தார். அவர்களை கிறிஸ்துவ வாழ்வில் ஈடுபடுத்த ஒரு சபையை நிறுவினார். அச்சபைக்கு "இயேசுமரி"(Jesus Mary) என்று பெயர் சூட்டினார். இவர், இன்னும் சில குருக்களின் துணைகொண்டு, சில அநீத கொள்கைகளை எதிர்த்தனர். அவ்வேளையும் மீண்டும் "நல்லாயன் கன்னியர்"(Good Shepherd Sisters) என்ற சபையையும் நிறுவினார்.
இயேசுவின் திரு இதய பக்தியையும், மரியாவின் மாசற்ற இதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். புனித மர்கரீத் மரியாள் பிரான்சு நாட்டில் திரு இதய ஆண்டவரிடம் காட்சி பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தன் துறவற இல்ல ஆலயத்தில் திரு இதய ஆண்டவரின் விழாவை கொண்டாடினார். இவர் குருமடத்தில் இருந்த காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்வை, தன் செபத்தின் வழி வாழ்ந்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.
Tuesday, 18 August 2015
இன்றைய புனிதர் 2015-08-18 புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ குருசாகா (St. Luis Alberto Hurtado Cruchaga, Jesuit) சேசு சபை குரு
பிறப்பு 22 ஜனவரி 1901 சிலி Chile
இறப்பு 18 ஆகஸ்டு 1952சிலி (Chile
முத்திபேறுபட்டம்: 16 அக்டோபர் 1994 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர்பட்டம்: 23 அக்டோபர் 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்தந்தை: ஆல்பர்ட் ஹூர்டாடோ லரைன் (Alberto Hurtado Larrain)
தாய்: அன்னா குருசாகா டி ஹூர்டாடோ(Ana
Cruchaga de Hurtado)
சகோதரன்: மிகுவேல்(Miguel)
இவர் மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாமல், எந்தவித அடிப்படை வசதியுமே இல்லாமல் வாழ்ந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமையில் வளர்ந்தார். இதனைக்கண்ட இயேசு சபை குரு ஒருவர். இவரின் குடும்பத்திற்கு உதவி செய்தார். அக்குருவின் உதவியினால் ஆல்பர்ட் கல்வி பயின்றார். அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வளர்ந்த ஆல்பர்ட் தினமும் திருப்பலியில் பங்கெடுத்தார். தனது பங்குத் தந்தையின் வழிநடத்துதலின்படி, தன் வாழ்வை அமைத்தார். தான் ஓர் குருவாக வேண்டுமென்ற ஆசையை பங்குத்தந்தையிடம் தெரிவித்தார். அவரையே தன் ஆன்மகுருவாகவும் தேர்ந்தெடுத்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளையும் சந்தித்து, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார்.
இவர் 1920 ஆம் ஆண்டு படைவீரராக சேர்ந்தார். 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபின் மீண்டும் கல்லூரியில் சென்று படித்தார். தன் படிப்பை முடித்தபின் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் பயிற்சியை முடித்தபின் 1933 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று குருவானார். குருவான பிறகு சாண்டியாகோ என்ற நகரில், கல்லூரியில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஆசிரியர் பணியை ஆற்றியதோடு பல ஏழைமாணவர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களின் வீடுகளை சந்தித்து, வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். பின்னர், "எல் ஹோகார் டே கிறிஸ்டோ” (L Hogar de Christo) என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு கருணை இல்லம் தொடங்கினார்.
எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார். ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட் புற்றுநோயால் தாக்கப்பட்டு காலமானார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)