Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 25 August 2015

இன்றைய புனிதர் 2015-08-25 புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)



பிறப்பு 25 ஏப்ரல் 1219, பிரான்ஸ்

இறப்பு 25 ஆகஸ்டு 1270 துனிசியா புனிதர்பட்டம்: 1297, திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்


அரசராக: 1230, 11 வயதில்

பாதுகாவல்: முயூனிக், சார்ப்ர்யூக்கன், பெர்லின், பிரான்சிஸ்கன் 3 ஆம் சபைக்கு பாதுகாவலர் லூயிஸ் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் லூயிஸ் டி லையன்(Louid de Lion). இவரின் தாய் ப்லான்சே(Blanche). இவரின் தாத்தா பிரான்சு நாட்டு அரசர் இரண்டாம் பிலிப்பு. புனித லூயிஸ் 9 வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் திருமணம் செய்து, 11 குழந்தைகளை ஆண்டவரின் ஆசீரோடு பெற்றார். தன் குழந்தைகளை தானே சிறந்த முறையில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். கிறித்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர் மேற்கொண்டார். இவர் 1226 ஆம் ஆண்டிலிருந்து, தான் இறக்கும்வரை அரசராக இருந்தார். இவர் 1248 ஆம் ஆண்டு 7 வது சிலுவைப்போரையும், 1270 ஆம் ஆண்டு மீண்டும் 8 வது சிலுவைப்போரையும் நடத்தினார். இவர் அரசர்களிலேயே முதல் புனிதர் என்ற பெயர் பெற்றார்.

No comments:

Post a Comment