283 சார்டினியன் (Sardinien), இத்தாலி இறப்பு 1 ஆகஸ்டு 371வெர்செல்லி, இத்தாலி
ஆரியனிஸ கொள்கையாளர்களால் (Arianism) கல்லால் எரிந்து கொல்லப்பட்டார்.
இவர் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்த பின்னர் மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் உரோம் நகரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 345 ஆம் ஆண்டு வெர்செல்லி என்ற மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய எளிமையான மறையுரையின் வழியாக திருச்சபையை அம்மண்ணில் பரவச் செய்தார். தம் மறைமாவட்டத்தில் ஆதின வாழ்க்கையை உருவாக்கினார். திருச்சபைக்காக மன்னர் கொன்ஸ்தான்சியுஸால்(Konsthansiysal) நாடுகடத்தப்பட்டார். அப்போது அவர் பல துன்பங்களை அனுபவித்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் நாட்டிற்கு திரும்பினார். ஆரியுசின் ஆதரவாளர்களுக்கு எதிராக நம்பிக்கையை திரும்பவும் நிலைநாட்டும்படியாக உழைத்தார்.
No comments:
Post a Comment