Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 17 August 2015
இன்றைய புனிதர் 2015-08-17 புனித ஆமோர், மறைப்பணியாளர் (St.Amor, Amorbach)
பிறப்பு ஏழாம் நூற்றாண்டு ஸ்காட்லாந்து/ பிரான்ஸ் இறப்பு 777ஆமோர்பாஹ் Amorbach, பவேரியா, Germany இவர் ஸ்காட்லாந்திலிருந்து மறைபணியாற்ற வந்தவர் என்றும், அக்குயிடானியன் (Aquitanien) என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும் வரலாறு கூறுகின்றது. இவர் எட்டாம் நூற்றாண்டில் மறைப்பணியை ஆற்றியுள்ளார். பின்னர் இவர் வூர்ட்ஸ்பூர்க் (Würzburg) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 734 ஆம் ஆண்டில் ஆமோர்பாக் என்ற ஊரில் ஆமோர் என்ற பெயரில் ஒரு துறவற சபையை நிறுவியுள்ளார்.
அமோர்பாக் என்பது ஓடன்வால்டு என்ற ஊரிலுள்ள ஓர் சிறிய கிராமம். வூர்ட்ஸ்பூர்க் என்ற மறைமாநிலத்தின் வடதென் பகுதிகளில் இவர் மிஷினரியாக பணிபுரிந்தார். இவர் அப்பகுதிகளில் மிகவும் போற்ற பெற்றவராக திகழ்ந்தார். இறை விசுவாசம் மக்களிடையே வளர வேண்டுமென்பதை குறிகோளாகக் கொண்டு பணியாற்றினார். இவர் தொடங்கிய "ஆமோர்" என்ற சபையை ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து, புனித ஆசீர்வாதப்பர் சபையை சார்ந்தவர்கள் வழிநடத்தியுள்ளார்கள். இத்துறவற சபையினர் மக்களிடையே இறைபக்தியை பரப்பி, இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் சிறப்பான முறையில் வளர்த்தெடுத்துள்ளார்கள். இவ்விறைபக்தி இன்று வரை அவ்வூர் மக்களிடையே வேரூன்றி உள்ளது. அன்று ஆமோர்பாக்கிலிருந்த இத்துறவற சபைக்கு சொந்தமான ஆலயம், இன்று புரோட்டஸ்டாண்டு மக்களின் ஆலயமாக உள்ளது. 1734 ஆம் ஆண்டு 1000 ஆம் வருட ஜூபிலியையும் இச்சபைக் கொண்டாடியது. இவர் எழுப்பிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, பழமையான பெயர்பெற்ற ஆலயங்களில் சிறந்த ஆலயமாக போற்றப்படுகின்றது.
வெர்ஸ்(Wersch) என்ற ஊரைச் சேர்ந்த மாக்சிமிலியன் என்பவரே இவ்வாலயத்தை கட்டினார். ஆமோர் கூறியதின்படி அவ்வாலயம் அமைக்கப்பட்டு, அக்காலத்திலேயே மிகவும் அழகுவாய்ந்த ஆலயமாக ஆமோர் அதைக் கட்டினார். இறைவனின் இல்லத்திற்கு வருபவர்கள், இறைவனை அழகுற ஏற்று, வழிபட வேண்டுமென்ற நோக்குடன் மிக அழகாக கட்டப்பட்டது. இவ்வாலயம் கட்டி முடித்தபிறகு ஏராளமான மக்கள் திருப்பலிக்கு குவிந்தனர். ஆலயத்தில் மக்கள் தொகை கணக்கிட இயலாமல் இருந்தது. மிகப் புகழ்பெற்ற ஆலயமாக இவ்வாலயம் திகழ்ந்தது.
No comments:
Post a Comment