Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 7 August 2015
இன்றைய புனிதர் 2015-08-08 புனித டோமினிக் (Dominikus OP) சபை நிறுவுனர
பிறப்பு 1170 காலேருவேகா(Caleruega),ஸ்பெயின் இறப்பு 6 ஆகஸ்டு 1221 பொலோங்னா(Bologna), இத்தாலி முக்திபேறுபட்டம்: 3 ஜூலை 1234 புனிதர்பட்டம்: திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
பாதுகாவல்: டோமினிக் சபையினருக்கு, காய்ச்சல் உள்ளோ ர்க்கு இவர் தனக்கு 16 வயது நடக்கும்போது புனித அகஸ்டின் சபையில் சேர்ந்தார். பின்னர் பலேன்சியா என்ற நகரில் இறை யியல் கற்றார். ஓஸ்மா நகரில் பணிபுரிந்த மறைபணியாளர்க ளுடன் சேர்ந்து மறைப்பணியாற்றினார். திருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட்(Pope Innocent III) அவர்களால் ஆல்பிஜென்சிய மக்களுக்கு எதிராக போராட அனுப்பப்பட்டார். அம்மக்களை தம் மறையுரையாலும், வாழ்வாலும் மனமாற்றினார். இப்பணி யை தொடர்ந்து செய்ய தம்மோடு சில தோழர்களை இணை த்து, "போதகர்களின் சபை" என்ற சபையை நிறுவினார். இவர் துறவிகள் சிலரை, தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று போதித்தார். தான் தொடங்கிய சபையில் செபவாழ்வு, இறைவார்த்தையின் வழி வாழ்தல், இறைவனோடிணைந்து செயல்படுதல் என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ வற்புறுத்தினார். தாங்கள் வாழும் இவ்வாழ்வை மக்களிடையே செயல்படுத்தத்தூண்டினார். இறை அருட்சாதனங்களை மக்கள் பெற்று, இறைவனோடு இணையவும், இறைவனை தங்களின் வாழ்வில் கண்டுணரவும் வேண்டுமென்பதால் தோமினிக் இர வும், பகலும் அயராது உழைத்தார். மக்களின் பாவங்களை மன் னிக்க அன்னைமரியிடம் இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார்.
No comments:
Post a Comment