புனிதர்பட்டம்: 1121, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் Papst Kalixtus II
ஆயராக: 1081, சாய்சோன் மறைமாவட்டம் (Soissons)
பாதுகாவல்: பீர் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்போர்
பிறப்பு 1040, மேலே Pamele, ஃப்லாண்டன் Flandern, பெல்ஜியம்
இறப்பு 15 ஆகஸ்டு 1087, ஃப்லாண்டன் Flandern
புனிதர்பட்டம்: 1121, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் Papst Kalixtus II ஆயராக: 1081, சாய்சோன் மறைமாவட்டம் (Soissons)
பாதுகாவல்: பீர் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்போர்
இவர் ஓடன்பூர்க்கிலுள்ள Oudenbourg புருகே Brügge என்ற ஊரில் பெனடிக்டீனர் சபை ஒன்றை நிறுவினார் என்று கூறப்படுகின்றது. இவர் குதிரை சவாரி செய்யும் ஒருவரின் மகனாக பிறந்தார். இதனால் அர்னூல்ப், தன் தந்தையை பின்பற்றி, குதிரை சவாரி செய்வதை பற்றி மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பின்னர் 1060 ல் புனித பெனடிக்டீனர் சபையில் சேர்ந்து குருவானார். இவர் 15 ஆண்டுகள் தனது குருத்துவ பணியை திறம்பட செய்தார். சிறந்த போதனையாளராக திகழ்ந்தார்.
1076 ஆம் ஆண்டு புனித பெனடிக்டீனர் சபையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1081 ஆம் ஆண்டு சோய்சன்ஸ் என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயராக இருக்கும்போது திருத்தந்தை 7ஆம் கிரகோரி அவர்களுக்கு பெரும் அளவில் உதவி செய்தார். அர்னூல்ப் தான் பிறந்த ஊரான பிளாண்டர்னில் மக்களிடையே அமைதி இல்லாமல் இருப்பதை உணர்ந்து பெரிதும் உழைத்தார். தன் உழைப்பின் பயனாக சமாதானத்தையும், அமைதியையும் அம்மக்களிடையே கொண்டுவந்தார். இதனால் இவர் பிளாண்டர்ன் நகர் மக்களால் "அமைதியின் அப்போஸ்தலர்" என்றழைக்கப்பட்டார். பின்னர் சில காரணங்களால் 1085 ஆம் ஆண்டு தனது ஆயர் பதவியிலிருந்து விலகினார்.
No comments:
Post a Comment