Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 6 August 2015
இன்றைய புனிதர் 2015-08-06 திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ் (Pope Hormisdas)
இவர் 514 ஆம் ஆண்டிலிருந்து 523 ஆம் ஆண்டு வரை திருத்தந்தையாக இருந்தார். திருச்சபையில் எண்ணிலடங்கா ஆலயங்களைக் கட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில், கான்ஸ்டான்ண்டினோபிளிலிருந்து 250 க்கும் மேற்பட்ட ஆயர்கள், உரோமுடன் இணைந்தார்கள். மற்றும் பல கீழை நாட்டு ஆயர்களையும் உரோம் கத்தோலிக்க திருச்சபையோடு இணைத்தார்.
திருமணமாகி மனைவியை இழந்த இவருக்கு சில்வேரியுஸ் Silverius என்ற பெயர் கொண்ட மகன் ஒருவர் இருந்தார். திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸிற்கு பிறகு, சில்வேரியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ் தனது பதவி காலத்தில் பல நற்செயல்களை புரிந்தார். இறை இயேசு காட்டிய நற்செய்தி பாதையில் தனது வாழ்வை வாழ்ந்தார். இவர் தன் வாழ்வின் இடரான சூழலிலும் கூட மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். அக்காசியன் Acacian என்ற தப்பறைக் கொள்கைக்கு எதிராக போராடினார்
No comments:
Post a Comment