Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 5 August 2015

இன்றைய புனிதர் 2015-08-05 அரசர் ஒஸ்வால்டு (King Oswald)




பிறப்பு 604, இங்கிலாந்துஇறப்பு

                                                        

ஆகஸ்டு 642,இங்கிலாந்து

 

பாதுகாவல்: ஆங்கிலேய அரசர்கள், காண்டோன் நகர்


இவர் வட உம்பிரியன் நாட்டில் அரசராக இருந்த எத்தல்பிரிட் என்பவரின் மகன். ஓஸ்வால்டு ஸ்காட்லாந்தில் உள்ள கொலும்பான் என்ற ஊரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். 634 ல் அவர் பிறந்த நாடான இங்கிலாந்தில் போர் மூண்டதால் ஸ்காட்லாந்திலிருந்து நாடு திரும்பினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களை பராமரிக்க இன்னல்கள் பல அடைந்தார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்கு உதவி செய்வதற்கென்று, ஆயர் எய்டன் Aidan என்பவரின் உதவியுடன் 635-ல், ஹோலி ஐஸ்லாந்தில் Holy Island இருந்த தீவில், புனித ஆசீர்வாதப்பர் துறவற இல்லம் ஒன்றை கட்டினார். ஏராளமான கிறிஸ்துவ மக்களை 
உருவாக்கினார். அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்து அவர்களுக்கு சிறந்ததோர் ஞானத்தந்தையாக திகழ்ந்தார். மிகச் சிறப்பாக கிறிஸ்தவர்களை காத்து, வழிநடத்திய இவரை ஹைட்னிஸ் Heidnisch King அரசர் தாக்கியபோது இறந்தார். ஓஸ்வால்டு இறந்த பின்னர், இவரின் பக்தி அதிவேகத்தில் பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் இன்னும் பல நாடுகளில் பரவியது

No comments:

Post a Comment