
பாதுகாவல்: ஹங்கேரி பிறப்பு 969 கிரான் Gran, ஹங்கேரி இறப்பு 15 ஆகஸ்டு 1038,ஹங்கேரி இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார். இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார். ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார்.
|
|
No comments:
Post a Comment