Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 24 August 2015
இன்றைய புனிதர் 2015-08-24 திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew மறைசாட்சி
பிறப்பு முதல் நூற்றாண்டு, கானா Cana, கலிலேயா இறப்பு முதல் நூற்றாண்டு, சிரியா பாதுகாவல்: ஃப்ராங்க்பர்ட், கொடிய நோய்களை தீர்க்க இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர். இவர் ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது.
யோவான் நற்செய்தி 1:45-50 -ல் பின்வரும் இறைவாக்குகள் இவரை பற்றி மேலும் கூறுகிறது. "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை" காண்பீர் என்றார்
No comments:
Post a Comment