Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 7 August 2015

இன்றைய புனிதர் 2015-08-07 புனித கயட்டான் (Kajetan von Tiene)சபை நிறுவுனர்

பிறப்பு 1480
ட்டியன்ன(Tiene),
வீசென்சா(Vicenza), இத்தாலி

இறப்பு
7 ஆகஸ்டு 1547
நேயாபல், இத்தாலி


புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்: பவேரியா (Bayern)

இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைகொ ண்டார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் திருச்சபை சட் டம் பயின்றார். பின்னர் குருத்துவ பயிற்சி பெற்று குருவானார். இவர் இஞ்ஞாசியாருடன் இணைந்து, திருச்சபை யில் நடந்த கொடுமைகளை எதிர்த்து, திருச்சபையை நல்வழியில் நடத்தி செல்ல பெரும்பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பிறரை எல்லாச் சூழலிலும் அன்பு செய்து வாழ்ந்தார். கடுமையான ஒறுத்தல் வாழ்வை வாழ்ந்து பல மாற்றங்களை மக்களி டையே கொண்டுவந்தார். ஏழைகளின் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்ந்தார். தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத் தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார். தன் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச் சுவரை பராமரிக்க ஓர் துறவற சபையை தொடங்கினார். இவ ரால் தொடங்கப்பட்ட இச்சபையினர் "தியேற்றைன்ஸ்" (Thietrains) என்றழைக்கப்பட்டார்கள். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர்.
 புனித கயத்தான் இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவராய் இருந்தார். இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து இறந்தார்.

No comments:

Post a Comment