Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 9 August 2015
இன்றைய புனிதர் 2015-08-09 திருச்சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா(Edith Stein) Holy Cross of St. Theresa Benadikta மறைசாட்சி
பிறப்பு12.08.1891,Breslau. Poland இறப்பு 9.08.1942, ஹிட்லர் வதை முகாம் Auschwitz Poland முத்திபேறுபட்டம்: 1 மே1987, கொலோன்(Köln), ஜெர்மனி, திருத்தந்தை 2 ஜான்பவுல்31 ஆம் வயதில் யூத மதத்திலிருந்து மனமாறி துறவியானார் இவர் ஓர் யூதர் குலத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களை ப்போல வாழவேண்டுமென்று விரும்பினார். இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இதனால் தாய் மிகவும் கடினப்பட்டு தன்பிள்ளைகளை வளர்த்தார். தெரசா மிகவும் அறிவாளியாக திகழந்தார். பல அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார். அப்போது தன் தாய்க்கு உதவி செய்யும் நோக்குடன் ஒரு கிறித்துவ குடும்பத்தில் உதவி செய்ய சேர்ந்தார். அக்குடும்பத்தில் இருந்த ஒரு பெண், தன் தாயை போலவே விதவையாக இருந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார்.
அப்போது அவ்வூரிலிருந்த பங்கு தந்தையை அணுகி, தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன்பின் முறைப்படி செபங்களை கற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று கிறித்தவராக மாறினார். பங்குத்தந்தையின் அறிவுரையின்படியும், விருப்பப்படியும் ஓர் கிறிஸ்துவ பள்ளியில் பயின்று, ஆலயக் காரியங்களில் ஈடுபட்டார். நன்கு கற்றுத் தேர்ந்த தெரசா யூதக் குலத்திலிருந்து, கிறிஸ்துவத்திற்கு மாறியபின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக பணியாற்றினார். மிகச் சிறப்பாக பணிபுரிந்த அவர் ஹிட்லர் ஆட்சியால் பாதிக்கப்பட்டார். ஹிட்லரால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்.
அவ்வேளையில்தான் ஒருநாள் கார்மேல் மடத்திற்குள் தஞ்சம் புகுவதற்காக நுழைந்தார். நாளடைவில் அக்கன்னியர்களுள் தானும் ஒருவரானார். பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.
No comments:
Post a Comment