Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 3 August 2015
இன்றைய புனிதர் 2015-08-03 புனித லீதிரா St. Lydia பிலிப்பியின்(இன்றைய கிரேக்கத்தின்) முதல் கிறித்தவர்
இன்றைய புனிதர் 2015-08-03 புனித லீதிரா St. Lydia
பிலிப்பியின்(இன்றைய கிரேக்கத்தின்) முதல் கிறித்தவர் பிறப்பு முதல் நூற்றாண்டு தியத்திரா (அக்-ஈசார்), ஆசியா மைனர் Thyatira (Ak-Hissar), Asia minor
இறப்பு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு ---
பாதுகாவல்: சாயத்தொழில் (Patronin der Färber)
திருத்தூதர் பவுலால் மனமாற்றம் செய்யப்பட்ட முதல் பெண் இவர். திருத்தூதர் பவுல் இவரின் வீட்டிலேயே தங்கி இவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். இவர் பிலிப்பி (Philippi) என்ற நகரில் மனமாற்றம் அடைந்தார். இவரைப்பற்றி திருத்தூதர்பணி 16:14-15-ல் விளக்குகிறது. உரோமையரின் குடியேற்ற நகரமான பிலிப்பியில் பவுல் சில நாள்கள் தங்கியிருக்கும் வேளையில் ஓய்வுநாளன்று நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரை சென்றார். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினார். அங்கு தியத்திரா நகரை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டு வந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தை திறந்தார். அவரும், அவர் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று கெஞ்சிக்கேட்டு எங்களை இணங்கவைத்தார்.
No comments:
Post a Comment