Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 13 August 2015
இன்றைய புனிதர் 2015-08-14 புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv) குரு, துறவி, மறைசாட்சி
பிறப்பு7 ஜனவரி Wola,Poland1894போலந்து இறப்பு 14 ஆகஸ்டு 1941ஹிட்லர் வதைமுகாம், போலந்து முத்திபேறுபட்டம்: 17 அக்டோபர் 1971 திருத்தந்தை ஆறாம் பவுல் புனிதர்பட்டம்: 10 அக்டோபர் 1982 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் மாக்சிமிலியன் சிறுவயதிலிருந்தே அன்னை மரியின் மீது பக்திகொண்டு வளர்ந்தார். இளம் வயதிலேயே பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். இவர் குருத்துவ பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும்போது, காசநோயால் தாக்கப்பட்டார். இறையன்னையின் அருளால் மீண்டும் குணம் பெற்றார். 1918 ஆம் ஆண்டில் உரோமையில் குருபட்டம் பெற்ற இவர் அன்னை மரியாளைப்பற்றி போதித்து, மக்களிடையே அன்னை மரியின் பக்தியை வளர்த்தார். பின்னர் "மாசற்ற மரியாவின் சேனை" என்ற பெயரில் ஓர் சபையைத் தொடங்கினார். அச்சபையை பல நாடுகளில் பரப்பி, மரியன்னையின் பக்தியை பரப்பினார். இவற்றிற்காக பலரிடம் அடிகள் பட்டு, பல அவமானத்திற்கு உள்ளானார். மறைப்பணியாளராக ஜப்பான் நாட்டிற்கு சென்றார். அங்கு திறம்பட நற்செய்தியை பறைசாற்றினார். மீண்டும் தன் தாய் நாடான போலந்து நாட்டிற்கு திரும்பினார். அப்போது போலந்து நாடு ஹிட்லரின் ஆட்சியால் பிடிப்பட்டது. அச்சமயத்தில் மூண்ட உலகப்போரில் மாக்சிமிலியனும் ஹிட்லரிடம் பிடிபட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வின்போது தன்னுடன் இருந்த மற்றவர்களிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அம்மக்களிடம் இறையுணர்வை வளர்த்தார். அச்சமயத்தில் ஹிட்லரால் இளைஞர் ஒருவன் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டான். இவர் ஓர் திருமணமான இளைஞர். தன்னை விடுவிக்கும்படி ஹிட்லரிடம் கெஞ்சினான். ஆனால் அவன் கோரிக்கையை ஹிட்லர் ஏற்க மறுத்தான். இதனைக் கண்ட மாக்சிமிலியன் அவ்விளைஞனுக்கு உதவி செய்து சென்று, அவனை விடுவிக்கும்படி மன்றாடி, அவனுக்கு பதில் தன் உயிரை கொடுக்கிறேன் என்று கூறினார். கடைசியாக அவ்விளைஞனுக்குப் பதில் தம்மையே சாவுக்கு கையளித்தார். பிறருக்காக தன்னையே தியாகம் செய்தார்.
No comments:
Post a Comment