Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 21 August 2015

இன்றைய புனிதர் 2015-08-21 புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை St. Pius X திருத்தந்தை


பிறப்பு 2 ஜூன் 1835 ரீசே Riese, இத்தாலி

இறப்பு 20 ஆகஸ்டு 1914 ரோம், இத்தாலி

முத்திபேறுபட்டம்: 1951

புனிதர்பட்டம்: 29 மே 1954 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
திருவழிபாட்டு பாடல்கள், கிரகோரியன் பாடல்கள், பூசைபுத்தகம், கட்டளை செபங்கள் போன்றவற்றை புதுப்பித்தவர்
நற்கருணையை விரைவில் பெற வழிவகுத்தவர் துறவறத்திற்கான படிப்பை புதுப்பித்தவர்

ஆயராக: 1884 மாண்டுவா மறைமாவட்டம் Mantua
திருத்தந்தையாக: 1903

இவர் ஓர் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். தவறாமல் ஆலயம் சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து வந்தார். ஞானம் நிறைந்த இவர், ஆன்மீக காரியங்களில் இரவு, பகலென்று பாராமல், அதிக அக்கறை காட்டி வந்தார். ஆலயப் பணிகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு செய்தார். பயஸ் 1858 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருத்துவ நிலைக்கு உயர்த்தப் பெற்றபின், தம் பணியை சிறப்பாக செய்தார். தம் பங்கிலிருந்த அனைத்துக்குடும்பங்களையும் சந்தித்து, கிறிஸ்துவ வாழ்வில் வளர்த்தெடுத்தார். பல மணி நேரம் ஆலயத்தில் அமர்ந்து செபித்தார். நேரம் பாராமல் பாவசங்கீர்த்தனம் கேட்டார். இவர் 1859 ஆம் ஆண்டு மாந்துவா(Manthu) நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வெனிஸ் நகரத் திருச்சபையின் தலைமை ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பிறகு 13 ஆம் சிங்கராயர்(Leo XIII) அவர்களின் மறைவுக்குப்பின் 1903 ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் புதுப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதை வாழ்வில் நேர்மையை கடைபிடித்து , ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து, மன உறுதியோடு நிறைவேற்றி வைத்தார். இவரின் பண்புகளால் மெய்யடியார்களிடையே கிறிஸ்துவ வாழ்வை தூண்டி வளர்த்தார். திருச்சபைக்கு ஊறு விளைவித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக, வீரத்துடன் நடவடிக்கை எடுத்தார். தான் பிறந்து, வளர்ந்த ஏழ்மையான வாழ்வை விடாமல் கைபிடித்து வந்தார். மிகச் சிறப்பாக இறைப்பணியை செய்த இவர், முதல் உலகப்போர் மூண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவர் தனது இறுதிமூச்சுவரை கத்தோலிக்க மக்களை பாதுகாத்து, அவர்களை ஆழமான விசுவாசத்தில் வளர்த்தெடுத்தார்.

No comments:

Post a Comment