Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 10 August 2015

இன்றைய புனிதர் 2015-08-10 திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)



பிறப்பு
230
ஸ்பெயின்

இறப்பு
10 ஆகஸ்டு 258
உரோம், இத்தாலி. வலேரியன் என்ற என்ற அரசனால் கொல்லப்பட்டார்

பாதுகாவல்: வுப்பர்டால்(Wuppertal) மற்றும் நூரன்பெர்க்(Nürnberg) நகரங்களுக்கு.


இவர் உரோமைத் திருச்சபையின், திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டஸிடம் (Pope Sixtus II) திருத்தொண்டராக இருந்தார். அப்போது மாமன்னன் வலேரியன் (Valerien) கிறித்தவர்களை அடக்கி, ஒடுக்கி துன்புறுத்தினான். அந்நேரத்தில் திருத்தந்தை 2 ஆம் சிக்ஸ்துவையும் அவருடன் இருந்த நான்கு திருத்தொண்டர்களையும் பிடித்து சென்று கொன்றான். அவர்கள் மரித்த நான்காம் நாளே லாரன்சும் மறைசாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார். அரசன் கேட்ட கேள்விகளுக்கு லாரன்ஸ் கூறிய விடைகளை அரசன் தவறாக புரிந்துகொண்டான். அதனால் லாரன்சை ஒரு இரும்புக்கட்டிலில் போட்டு அதற்கடியில் நெருப்பு வைத்து கொளுத்தி கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் லாரன்சோ, நெருப்பில் வேகும்போது இறைவனைப் போற்றி புகழ்ந்து செபித்தார். தன் உடல் முழுவதும் எரிந்த பிறகு, நன்றாக வெந்துவிட்டது, திருப்பிப்போடுங்கள் என்றார். இவரது கல்லறை காம்போ வேரோனா என்ற பகுதியில் தீபூர்த்தினா சாலை அருகே உள்ளது. அக்கல்லறையின்மேல் மாமன்னர் கொன்ஸ்தான்சியுஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினார். 4 ஆம் நூற்றாண்டிலேயே இப்புனிதரின் பக்தி பரவியது.

No comments:

Post a Comment