மாக்சிமின் ட்ராக்ஸ் (Maxminius Thrax) என்ற அரசனால் கொல்லப்பட்டார்.
கி.பி. 231 ஆம் ஆண்டில் போன்சியானு உரோம் நகரில் ஆயராகத தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவர்களுக்காக பல துன்பங்களைப்பட்டார். திருச்சபையின் வளர்ச்சிக்காக இரவு, பகலென்று பாராமல் உழைத்தார். இதனால் மன்னர் மாக்சிமின்(Maximean) அவர்களின் அதிருப்திக்கு ஆளானார். அதனால் 235 ஆம் ஆண்டு, இப்போலித்து என்ற பெயர் கொண்ட குருவோடு சேர்த்து மன்னரால் நாடு கடத்தப்பட்டார். திருச்சபையின் ஒழுங்குகளை கண்ணும் கருத்துமாக குரு இப்போலித்து கடைபிடித்தார். அவற்றின்படி வாழ, தான் நிறைவேற்றிய திருப்பலியின் வழியாக மக்களை தூண்டினார். இதனால் மன்னரால் தண்டிக்கப்பட்டு, இறுதியில் நாடு கடத்தப்பட்டார். அங்கே திருத்தந்தை போன்சியானும், குருவான இப்போலித்தும் இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இறைவன் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் தளரவில்லை. இதனால் மன்னன் கொடுமையான துயரங்களை கொடுத்து அனுபவிக்கவைத்தான். அங்கே மன்னன் இவர்கள் இருவரிடமிருந்தும் பதவிகளை பறித்தான். அதன்பின் கிறிஸ்துவின் பொருட்டு தங்கள் உயிரை நீத்தனர். இவர்களின் உடல், அங்கிருந்த கலிஸ்துஸ் என்ற கல்லறை சுரங்கத்தில் புதைக்கப்பட்டது. இவ்விருவருக்கும் 4 ஆம் நூற்றாண்டிலிருந்து உரோமை திருச்சபையானது வணக்கம் செலுத்தி வருகின்றது.
No comments:
Post a Comment