Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 5 October 2015
இன்றைய புனிதர் 2015-10-06 புனித புரூனோ St. Bruno
பிறப்பு1030,கொலோன் Köln, ஜெர்மனி
இறப்பு 6 அக்டோபர்,செர்ரா சான் புரூனோ Serra San Bruno
புனிதர்பட்டம்: 17 பிப்ரவரி 1623, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி பாதுகாவல்: கலாப்ரியா நகர்(Calabria)
இவர் தனது கல்வியை பிரான்சிலுள்ள ரைம்ஸ் (Rheims) நகரில் முடித்தார். 1056 ஆம் ஆண்டு ரைம்சில் இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில் ஆலய நிர்வாகியாக(Chancellor)நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1088 ல் திருத்தந்தை 2 ஆம் ஊர்பான் (Urban II) அவர்களுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இவர் மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். இவரின் இளமைப் பருவ வாழ்வைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் புனித பவுலைப் பற்றியும், திருப்பாடல்களைப் பற்றியும் Commentary on St. Paul and Psalms) எழுதிய புத்தகம் புகழ்பெற்றது. திருச்சபையில் திருத்தந்தைக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அகற்ற, திருத்தந்தை 7 ஆம் கிரகோரிக்கு பெரிதளவில் உதவினார். இறைவனின் மேல் கொண்ட பற்றால், கர்த்தூசியன் (Carthusian) சபையை தொடங்கினார். இச்சபை தொடங்கிய காலத்தில், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1514 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 10 ஆம் லியோ மீண்டும் அச்சபையை ஊக்கமூட்டி வளர்த்தெடுத்தார்.
செபம்: எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! சிறந்த அறிவாளியான புனித புரூனோவை, எம் திருச்சபைக்கு, கொடையாகத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அற்புதமான முறைய்ல் பணியை ஆற்றிய புரூனோவைப்போல, நீர் எமக்குத் தந்த அறிவை பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட உம் ஆசீரைத் தாரும்.
No comments:
Post a Comment