Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 26 October 2015
இன்றைய புனிதர் 2015-10-26 ஸ்ட்ராஸ்பூர்க் ஆயர் அமாண்டூஸ் Amandus von Straßburg
பிறப்பு 290
இறப்பு355,ஸ்ட்ராஸ்பூர்க், பிரான்ஸ்
இவர் ஸ்ட்ராஸ்பூர்க் மறைமாவட்டத்தின் முதல் ஆயர். இவர் 343 ல் சார்டிகா(Sardika) நகரில் நடந்த பொதுச்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 346 ஆம் ஆண்டு கொலோன் நகரில் நடந்த பொதுச்சங்கத்தையும் தலைமையேற்று நடத்தினார். இவர் இறந்தபிறகு, ஸ்ட்ராஸ்பூர்க் பேராலயத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இவர் எப்போதும் ஆயருக்குரிய உடையுடனே வாழ்ந்தார் என்று கூறப்படுகின்றது. இவரைப்பற்றிய மற்ற குறிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை
செபம்: ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! சிறந்த அறிவாளியான் ஆயர் ஆமாண்டூசை எம் திருச்சபைக்கு தந்தமைக்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கின்றோம். எம் திருச்சபையில் உள்ள ஆயர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், அறிவையும் தந்து, உம் மந்தையின் ஆடுகளை பேணி வளர்க்க, தேவையான அருளை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment