Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 18 October 2015
இன்றைய புனிதர் 2015-10-19 19 புனித சிலுவை சின்னப்பர் Paul of the Cross, Confessor
பிறப்பு3 ஜனவரி 1694,ஒவாடா ovada, இத்தாலி
இறப்பு18 அக்டோபர் 1775, உரோம், இத்தாலி
இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ஓர் வணிக வியாபாரி. இவர் தன் சிறுவயதிலிருந்தே வணிகம் செய்ய தந்தைக்கு உதவினார். ஞான உபதேச வகுப்பின் வழியாக ஆன்ம வாழ்வில் வளர்ந்து வந்தார். தனது 22 ஆம் வயதில் தன்னை ஒடுக்கி, செப, தவ வாழ்வில் ஈடுபட்டார். தான் பிறந்த ஊரிலிருந்து அனைத்து ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடைபுரிந்தார். பின்னர் தன்னுடன் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, மறைபரப்புப் பணியை ஆற்றினார்.
இவர் 1725 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் பெனடிக்டின் ஆசியுடன் துறவற குழுமம் ஒன்றை நிறுவினார். பின்னர் நாடெங்கும் சென்று போதனைப்புரிந்து மறைப்பணியாற்றினார். 1769 ஆம் ஆண்டு இவர் தொடங்கிய அத்துறவற இல்லம் "பசியோனிஸ்ட்" Passionist என்ற பெயர் கொண்டு, துறவற சபையாக திகழ்ந்தது. இவர் "சிறந்த மறைப்பணியாளர்" என்ற பட்டம் பெற்று, மக்களின் மீட்புக்காக பெரிதும் பாடுபட்டார். இவர் போதிப்பதில் சிறந்த ஆர்வம் கொண்டு பணியாற்றினார். கடுந்தவ, செபத்தினால் இறுதிவரை தன் சபைக்காக உழைத்தார். இவர் தான் இறக்கும் வரை, திருச்சிலுவையின் மீது பக்திக்கொண்டு வாழ்ந்தார்.
செபம்: எல்லாம் வல்லவரே எம் தந்தையே! சிலுவைமீது மட்டுமே அன்பு கொண்டிருந்த உமது மறைப்பணியாளராம் புனித பவுல், தம் வேண்டுதலால் உமதருளை எங்களுக்குப் பெற்றுத்தருவாராக. நாங்கள் அவருடைய முன்மாதிரியான தூண்டுதலைப் பெற்று, மனவுறுதியுடன் எங்கள் சிலுவையை அரவணைத்துக் கொள்ள செய்தருளும்.
No comments:
Post a Comment