Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 20 October 2015
இன்றைய புனிதர் 2015-10-20 சால்ஸ்பூர்க் ஆயர் விட்டாலிஸ் Vitalis von Salzburg
பிறப்பு7 ஆம் நூற்றாண்டு
இறப்பு 20 அக்டோபர் 730, சால்ஸ்பூர்க் Salzburg, ஆஸ்திரியா
பாதுகாவல்: குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்
இவர் தனது இளம்வயதிலிருந்தே மறைப்பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். இவர் சால்ஸ்பூர்க் ஆயர் ரூபர்ட் (Rubert) என்பவரிடம் கல்வி கற்றார். பிறகு ஆயர் ரூபர்ட் 27 ஆம் நாள் மார்ச் 718 ஆம் ஆண்டு இறந்துவிடவே, அவருக்கு பிறகு, அவரின் ஆசிரியர் பதவியை விட்டாலிஸ்(Vitalis) ஏற்றார். 12 ஆண்டுகள் தொடர்ந்து அப்பணியை செய்தார். அதன்பிறகு விட்டாலிஸ் சால்ஸ்பூர்க்கில் ஆயர் பதவியை ஏற்றார். ஆயர் ரூபர்ட் பெரிய மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் விட்டாலிஸ் அவ்விருப்பத்தை தன் பணியின் வழியாக நிறைவேற்றினார். இவர் சால்ஸ்பூர்க்கில் புகழ் வாய்ந்த மறைபரப்பு பணியாளராக திகழ்ந்தார்.
செபம்: ஆற்றல் மிக்க இறைவா! குழந்தை பருவத்திலிருந்தே உம்மீது ஆர்வம் கொண்டு வாழ புனித விட்டாலிசை தூண்டினீர். உமது இறைத்திட்டத்தை அவரில் நிறைவேற்றினீர் இன்று எம்மை நீர் தயையுடன் கண்ணோக்கியருளும். உமது அன்பால் நாங்கள் தூண்டப்பட்டு என்றும் உம்பணியில் ஆர்வம் கொண்டு செயல்பட நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
No comments:
Post a Comment