Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 29 October 2015
இன்றைய புனிதர் 2015-10-30 திருக்காட்சியாளர் அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் Alfons Rodriquez
பிறப்பு25 ஜூலை 1531,செகோவியா Segovia, ஸ்பெயின்
இறப்பு31 அக்டோபர் 1617, மலோர்கா Mallorca, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1825 புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888
அன்பர்களே புனிதர்கள் என்றவுடன் குருமார்,கன்னியர்கள்,பாப்பாண்டவர்கள் இவர்கள் தான் தகுதியானவர்கள் என்பது பெரும்பாலோரின் எண்ணம். அது தவறு. திருமணம் செய்தவரும் குருவாகாலம்! ஏன் புனிதராகவும் மாறலாம் என்பதற்கு இந்த புனிதர் ஒரு சாட்சி! இவர் ஓர் திருமணமானவர். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்தார். அதன்பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் மறைப்பணியாற்றினார். பின்னர் இவர், தான் தங்கியிருந்த துறவற இல்லத்தில், வாயில்காப்பாளராக பணியாற்றினார். அச்சமயத்தில் பலமுறை திருக்காட்சியைக் கண்டார். இவர் மிக ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் கீழ்படிதலுடன் இருந்தார். இவர் தான் பெற்ற திருக்காட்சிகளில் சிலவற்றை கடிதமாகவும் எழுதியுள்ளார்.
செபம்: சமாதானம் அருள்பவரே எம் கடவுளே! திருமணமான ஒவ்வொரு தம்பதியினரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தங்களின் குடும்ப வாழ்வில் வரும் ஒவ்வொரு துன்பங்களையும், பொறுமையுடன் ஏற்று கொள்ளத் திடமான மனதைத் தாரும். தங்கள் பிள்ளைகளின் நலனை கருதி வாழ, நல் உள்ளம் தாரும். ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தைப்போல வாழ உம் அருள் தந்து, வழிநடத்திட வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment