Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 10 November 2015
இன்றைய புனிதர் 2015-11-11 தூர்ஸ் நகர் ஆயர் மார்ட்டின் Martin von Tours
பிறப்பு316,ஸ்டைனமாங்கர் Steinamanger, ஹங்கேரி
இறப்பு8 நவம்பர் 397,தூர்ஸ்,பிரான்ஸ்
பாதுகாவல்: ரோட்டன்பூர்க், மைன்ஸ் நகர், படைவீரர்கள், குதிரைகள், துப்பாக்கி தயாரிப்பவர்கள், தையல்காரர்கள், கையுறை மற்றும் தொப்பி தயாரிப்பவர்கள், கைதிகள், வீட்டுவிலங்குகள், ஆடு, விவசாய நிலங்கள்
மார்ட்டின் தந்தை இத்தாலி நாட்டை சார்ந்தவர். எனவே தன் தந்தை பிறந்த நாட்டில் கிறிஸ்தவ பக்தியோடு வளர்க்கப்பட்டார். மார்ட்டின் தனது 10 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்றார். அன்றிலிருந்து தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். ஆனால் இவரின் ஆசை நிறைவேற தாமதம் ஆனது. இவரின் தந்தை மார்ட்டின் படைவீரர்களின் தலைவனாக்க விரும்பினார். இதனால் இவரின் 15 ஆம் வயதிலேயே காலிஷன்(Gallischen) என்ற பெயர் கொண்ட படையில் சேர்க்கப்பட்டார். இதனை விரும்பாமல் மார்ட்டின் வேதனை அடைந்தாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றார். போரில் பங்கெடுப்பதற்கான தைரியத்தை வளர்த்துக்கொண்டார். ஒருமுறை மார்ட்டின் மிக குளிரில் போரிட நேரிட்டது. குளிரை தாங்க முடியாமல் தவித்தார். அவ்வேளையில் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். இவரின் மன்றாட்டை கேட்டு பதிலளிக்கும் விதத்தில் இவருக்கு குளிர்தாங்கும் ஆடைகளை பரிசாக தந்தார். இவ்வற்புதத்தை பெற்ற மார்ட்டின் படைவீரர்களின் மத்தியில் மறைப்பணியை ஆற்றினார். பிறகு தான் பிறந்த ஊருக்கு திரும்பி சென்று மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டார். குருப்பட்டம் பெற்றபின் ஆலயங்கலையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். 371 அல்லது 372 ஆம் ஆண்டு தூர்ஸ் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பை ஏற்றபின், பல துறவற சபைகளை தன் மறைமாவட்டத்திற்கு வரவழைத்தான். துறவிகள் தங்குவதற்கென துறவற மடங்கலை கட்டி எழுப்பினார். ஆனால் ஆயர் மார்ட்டின் மிக ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். தனது 30 வருட ஆயர் பதவியில் பல இன்னல்கள் அடைந்து நற்செய்தியை பறைசாற்றினார். அதன்பிறகு மறைப்பணியாளராகப் பணியாற்ற பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடத்தில் அன்பு காட்டி சிறந்ததோர் நண்பராக செயல்பட்டார். குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஆன்ம வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
இவர் துறவறமடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இவர் எல்லா மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். பல மறைப்பணியாளர்களைப் பேணி பயிற்றுவித்தார்.
செபம்: எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுளே, ஆயரான புனித மார்ட்டினுடைய வாழ்வினாலும், இறப்பினாலும் மாட்சி அடைந்தீரே. எங்கள் உள்ளங்களிலும் உமது அருளின் வியத்தகு செயல்களை புதுப்பித்து நாங்கள் வாழ்விலும் இறப்பினும் உமது இறை அன்பிலிருந்து பிரிந்திருக்க விடாதேயும்.
No comments:
Post a Comment