Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 22 November 2015
இன்றைய புனிதர் 2015-11-22 மறைசாட்சி செசிலியா
பிறப்பு200,உரோம், இத்தாலி
இறப்பு22 நவம்பர் 230,உரோம்
பாதுகாவல்: இசைக்கருவி தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் இவர் ஓர் ரோமன் கத்தோலிக்க உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இவர் தனது மனதிற்குள் இறைவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இயேசுவை தன் கணவராக நினைத்து வாழ்ந்தார். ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை வலேரியானூஸ் என்ற இளைஞர்க்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அவைகளை செசிலியா பெரியதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியானூஸ்சுடன் திருமணம் செய்ய இருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.
இவர்தான் திருமணம் செய்யும் நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிந்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். கணவரிடம் பெற்றோர் இவரை ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.
வலேரியானூஸ், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன் கடவுளின் தூதர் ஒருவரை தன்னிடம் பேசுமாறு கூறினார். செசிலியா அதை நிரூபிக்க வலேரியானூஸ் முதலில் திருத்தந்தையிடம் திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு படிந்து அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று ரோஜா மலர் ஒன்றை கொடுத்து அவரை வாழ்த்தினார். அதன்பின்னர் வலேரியானூஸ் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியானூஸ் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடைபுரிந்தனர்.
செசிலியா தான் மணந்த வலேரியானூசின் உதவியுடன் கடவுளின் அன்பை சுவைத்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்புச் செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றி புகழ்ந்தார். இவரின் பக்தியை கண்ட எதிரிகள் கொதிக்கும் சூடான நீரில் அவரை மூழ்கடித்து அக்கொடியவர்களின் ஆசைத் தீர அணுஅணுவாக கொன்றனர். கொதிக்கும் சூடான நீரில் இவர் மூன்று நாள் எத்தீக்காயமும் இல்லாமல் உயிருடனே இருந்தார். இவர் கிறிஸ்துவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.
செபம்: ஆண்டவராகிய கடவுளே! புனித செசிலியாவின் திருநாளை சிறப்பிக்கும் இவ்வினிய வேளையில் உம்மை நோக்கி எழும் எங்கள் மன்றாட்டுகளுக்கு தயவாய் செவிசாய்த்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால் எங்கள்மீது இரங்கி நாங்கள் கேட்கும் வரங்களை தந்தருளும்.
No comments:
Post a Comment