Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 23 November 2015
இன்றைய புனிதர் 2015-11-23 துறவி கொலும்பான் Kolumban
பிறப்பு542,லைன்ஸ்டர் Leinster, அயர்லாந்து
இறப்பு23 நவம்பர் 615,போபியோ Bobbio, இத்தாலி
பாதுகாவல்: அயர்லாந்து, போப்பியோ, தீய ஆவியிடமிருந்து இவர் தன் வயதில் துறவற மடத்தில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 560 ஆம் ஆண்டில் பாங்கோர்(Bangor) என்ற நகரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். பின்னர் இச்சபையை கொலும்பான் சிறந்த முறையில் வளர்த்தெடுத்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இவர் பல்வேறு துறையில் பணியாற்றினார். நீண்ட காலம் ஆசிரியராகவும் இருந்தார். இவர் 590 ஆம் ஆண்டு தன்னுடன் 30 ஆண் துறவிகளை அழைத்துக்கொண்டு பாங்கோர் விட்டு வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று மீண்டும் துறவற சபை ஒன்றை நிறுவினார்.
இங்கிலாந்தில் புதிய சபைக்காக துன்பங்கள் பலவற்றை சுமந்தார். இருப்பினும் மனந்தளராமல் சிறந்த மறையுரையை ஆற்றி, பல இளைஞர்களை இறைவன்பால் ஈர்த்தார். அதன்பிறகு லுக்செயுல் (Luxeuil) என்ற இடத்தில் பல இளைஞர்களைக் கொண்டு மீண்டுமோர் துறவற சபையை தொடங்கினார். இவர் தான் சென்ற இடமெல்லாம் அந்நகரின் கலாச்சாரத்திற்கேற்றவாறு துறவற சபைகளின் ஒழுங்குகளை அமைத்துக்கொடுத்தார். மிக குறைந்த ஆண்டுகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரின் சபையில் சேர்ந்து இறைப்பணியாற்றினர்.
இவர் தொடங்கிய சபைகள் நன்கு வளர்ச்சியடைந்தபின் புனித பெனடிக்ட் துறவற சபையின் ஒழுங்குகளை தான் தொடங்கிய அனைத்து சபைகளிலும் கடைபிடித்து வாழ வழிவகுத்துக் கொடுத்தார். தான் நிறுவிய துறவற சபைகளுக்காக கொலும்பான் அயராது உழைத்தார். அதன்பிறகு 613 ஆம் ஆண்டு நோயால் தாக்கப்பட்டார். இருப்பினும் தன் உடல் நோயைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜெர்மனியிலுள்ள போடன் சே(Boden See) வந்தடைந்தார். அங்கு சில காலம் மறைப்பணியாற்றியபின் தன்னுடன் அவரின் சபை சகோதரர் ஒருவரை அழைத்துக்கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்று போபியோவில் மீண்டும் சபையை தொடங்கினார். இத்துறவற சபையே இவர் நிறுவிய கடைசி சபையானது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபின் காலமானார். மறைநூல்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த இவர் தான் நிறுவிய சபைகளை இறைவனின் மகிமைக்காக அயராது உழைத்து உயர்த்தினார். கிறிஸ்துவ வாழ்விக்கும், துறவற வாழ்வுக்கும் மிகவும் பாராட்டபெற்றவராய் திகழ்ந்தார்.
செபம்: என்றும் வாழ்பவரே எம் தந்தையே! நற்செய்தி பணியின்மீதும் துறவற வாழ்வின்மீதும் புனித கொலும்பானின் இதயத்தில் பேரார்வத்தை வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவருடைய இறைவேண்டுதலாலும், முன்மாதிரிகையாலும் நாங்கள் யாவற்றுக்கும் மேலாக உம்மையே தேடுவதிலும் நம்பிக்கையுள்ள சமூகத்தை வளர்ப்பதிலும் கருத்துள்ளவர்களாய் இருக்கசெய்தருளும்.
No comments:
Post a Comment