Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 27 November 2015
இன்றைய புனிதர் 2015-11-28 துறவி யாக்கோபுஸ் டி மார்கியா Jacobus de marchia OFM
பிறப்பு1400,மோண்டேப்ராண்டோனே Monte Prandone, இத்தாலி
இறப்பு28 நவம்பர் 1476,நேயாப்பல், இத்தாலி
புனிதர்பட்டம்: 10 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட் இவர் சியென்னா நகர் (Siena) பெர்ன்ஹார்டின் Bernhardin மாண bவர். இவர் திருச்சபையை பற்றி தவறாக போதித்த வர்களுக்கு எதிராக மிக அருமையாக சொற்பொழிவாற்றி மறைப்பணியா ற்றினார். இத்தாலி முழுவதிலுமிருந்த பிற இனப் பிரிவினை சபைகளின் போதனைகளை எதிர்த்து கிறிஸ்துவ மறையை வளர்த்தார். 1437 ஆம் ஆண்டு ஹங்கேரி மற்றும் போய்மன் (Böhmen) நாடுகளுக்கு சென்று மறைப்பணியாற்றினார். இவர் தான் போதித்தவைகளை பற்றி கடிதங்களை எழுதியுள்ளார். பிரான்சிஸ்கன் சபையில் சிறந்த மறைப்போதனையாளர்களில் இவரும் ஒருவராவார்.
செபம்: படைப்புகளை பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! இன்றைய இப்புனிதரின் விழாவை சிறப்பிக்கும் ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசிர்வதியும். சிறப்பாக புனித பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளை ஆசீர்வதித்து, பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment