முத்திபேறுபட்டம்: 1643 புனிதர்பட்டம்: 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
இவர் பிரிவினையை சபையை சார்ந்த பெற்றோரின் மகனாகப் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, திருமுழுக்கு பெற்று, கிறிஸ்துவமறையை தழுவினார். 1604 ஆம் ஆண்டு "பசிலியின் துறவற சபையில்" (Basilianer) சேர்ந்து குருவானார். தனது 38 ஆம் வயதில் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியப்புக்குரிய முறையில் திருச்சபையின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இவர் விட்டேப்ஸ்க் (Witebsk) என்ற நகருக்கு பார்வையிட சென்றபோது, பகைவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செபம்: ஆற்றலின் ஊற்றே எம் இறைவா! புனித யோசபாத் தூய ஆவியாரால் நிறைந்தவராய், தன் மந்தைக்காக தம் உயிரைக்கொடுத்தார். அத்தூய ஆவியை எம் திருச்சபையின் மீது பொழிந்தருளும். இப்புனிதரின் வேண்டுதலால், நாங்களும் உமதருளால் திடமடைந்து, எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உயிர் துறக்க தயங்கா மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
No comments:
Post a Comment