Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 2 September 2015

இன்றைய புனிதர் 2015-09-03 திருத்தந்தை பெரிய கிரகோரியார் St.Gregory the Great, Pope and Doctor of the Church மறைவல்லுநர்




பிறப்பு 540, உரோம்
இறப்பு 12 மார்ச் 604
பாதுகாவல்: ஆசிரியர்கள், மாணவர்கள், தொற்று நோயிலிருந்து

இவர் தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். பின்னர் கான்ஸ்டாண்டினோபிளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றினார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார். தன் ஆட்சியிலிருந்த சிறைப்பட்ட மக்களை மீட்டார். திருச்சபையில் நேர்மையின்றி, நெறிகெட்ட பதவியிலிருந்த பணியாளர்களையும், குருக்களையும் பணியிலிருந்து நீக்கினார். அப்போது "லம்பர்ட்" என்ற இனத்தை சேர்ந்த அரக்கர்கள் கிறிஸ்துவ மக்களையும், திருச்சபையையும் கடுமையாக தாக்கினார். அவர்களை மிக தைரியத்துடன் கிரகோரியார் அடக்கினார். தன் பதவி காலத்தில் யூத மக்களுக்கு முன்னிடம் கொடுத்தார். அக்காலத்தில் பிளேக் நோய் நாடெங்கும் பரவி வந்ததால், பெருமளவில் அம்மக்களுக்கு உதவினார். அம்மக்களிடையே திருமறையை பரவ செய்து அதை நிலைநாட்டினார். இவர் பல நூல்களை எழுதி அதன் வழியாகவும் திருமறையை வளர்த்தார்.


No comments:

Post a Comment