Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 14 September 2015

இன்றைய புனிதர் 2015-09-15 ஜெனுவா நகர் திருக்காட்சியாளர் & தாதி கத்தரீனா Katharina von Genua


பிறப்பு 1447, ஜெனுவா, இத்தாலி

இறப்பு 15 செப்டம்பர் 1510, ஜெனுவா

புனிதர்பட்டம்: 1737, திருத்தந்தை 12 ஆம் கிளமென்ட் பாதுகாவல்: ஜெனுவா நகர், மருத்துவமனைகள்

இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். தனது சிறுவயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று மிக ஆசைக்கொண்டார். ஆனால் 1463 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயதில் பத்ரீசியர் கியூலியானோ Patrizier Giuliano என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவரால் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் மிகவும் துன்பப்பட்டார். குடும்பவாழ்வில் இருக்கும்போதும் கூட இவரின் மனம் இறைவனையே நாடிச் சென்றது. இறைவன் மீது கொண்ட அன்பால் 1474 ல் இறைவனின் காட்சியை முதன்முறையாக பெற்றார். இதனால் மிக மகிழ்ச்சி அடைந்தார் கத்தரீனா. இதற்கிடையில் அவரின் கணவரும் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.

கத்தரீனாவின் ஆன்மீக வாழ்வால் அவரின் கணவர் ஈர்க்கப்பட்டார். அவரும் இறைவனை நம்பி ஏற்றுக்கொண்டார். தானும் ஓர் துறவற இல்லத்தில் சேர்ந்து தொண்டாற்ற எண்ணினார். இதனால் கத்தரீனாவும் அவரிடமிருந்து பிரிந்து, நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இறைவனின் தரிசனத்தை பெற்றார். பல ஆண்டுகள் உண்ணாநோன்பிருந்து செபித்து, திவ்ய நற்கருணை மட்டுமே உட்கொண்டு, உயிர் வாழ்ந்தார்

No comments:

Post a Comment