Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 13 September 2015
இன்றைய புனிதர் 2015-09-13 புனித யோவான் கிறிசோஸ்தோம் ஆயர், மறைவல்லுநர்
இவர் ஓர் சிறந்த மறைபோதகர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு குருத்துவப்பயிற்சி பெற்று குருவானார். மறைபோதகராக பணியாற்றி, ஏராளமான நன்மைகளை செய்தார். 397 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளுக்கு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பை மிக சிறப்பாக ஆற்றினார். பணிகளின் நடுவிலும் தவ வாழ்வை விடாமல் மேற்கொண்டார். குருக்களின் நடத்தையும் மறைபணியாளர்களின் வாழ்வையும் அறநெறிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அரசர்களாலும், தனக்கு எதிராக செயல்பட்டவர்களாலும் அதை நிறைவேற்ற முடியாமல் தவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment