Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 3 September 2015

இன்றைய புனிதர் 2015-09-04 புனித ரோசலீனா St.Rosalina


பிறப்பு 1130, பலேர்மோ (Palermo),இத்தாலி

இறப்பு 1166, மவுண்ட் பெலேக்ரினோ Pellegrino, இத்தாலி

புனிதர்பட்டம்: 1625 திருத்தந்தை 8 ஆம் ஊர்பான் Pope Urban VIII பாதுகாவல்: பலேர்மோ நகரின்

பாதுகாவலர்

இவர் சீனிபால்டு(Sinibald) என்பவரின் மகள். இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்கவேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார். தன் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு குகைக்கு சென்று வாழ்ந்தார். உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்தார். இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார். பின்னர் அவர் வாழ்ந்த குகையைவிட்டு வெளியேறி பெலேக்ரினோ என்ற மலைக்கு சென்றார். அம்மலையில் சிறிய இல்லம் அமைத்து தனது வாழ்வை இறைவனோடு வாழ்ந்தார். அங்கு ஒரு கெபி கட்டினார். அதன் அருகில் குழி ஒன்றை வெட்டி, தான் இறந்ததும் அதில் புதைக்கும்படி இறைவனிடம் வேண்டினார். இவர் செபித்தவாறே இவரின் இறந்த உடல் அக்குழியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1625 ஆம் ஆண்டு உடல் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டே இவர் புனிதர் பட்டமும் பெற்றார்.

No comments:

Post a Comment