Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 13 September 2015

இன்றைய புனிதர் 2015-09-14 கொலோன் நகர் ஆயர் மட்டேர்னஸ் Maternus von Köln


பிறப்பு  3 ஆம் நூற்றாண்டு

இறப்பு 14 செப்டம்பர் 314

பாதுகாவல்: காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து


இவர் கொலோன் நகர் ஆயர்களில் மிகச் சிறந்த முதல் வரலாற்று ஆயர் என்ற பெருமையை பெற்றவர். 313 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் முதன்முதலில் பங்கெடுத்தவர். நற்செய்தியை பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினார். நற்செய்தியை நிலைநாட்ட பெரும்பாடுபட்டார். பல இன்னல்களை அடைந்தார். உரோமில் பேதுருவிற்குப் பிறகு, நற்செய்தியை பரப்புவதில், அதிகம் ஆர்வம் காட்டியவர் இவர் என்று கூறப்படுகின்றது.

கொலோன் மறைமாவட்டத்தை உருவாக்கிய முதல் ஆயர் இவர். டிரியர் மறைமாவட்டத்தையும் இவர்தான் உருவாக்கினார் என்று வரலாறு கூறுகின்றது. டிரியரில் மக்கள் ஒன்றுமில்லாமல் துன்பப்படும்போதும், வாழ வழி இல்லாமல் தவித்தபோதும் இவர்தான் வழிகாட்டினார் என்று கூறப்படுகின்றது.
 


No comments:

Post a Comment