Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 24 September 2015

இன்றைய புனிதர் 2015-09-24 புனித ஜெரார்ட் சார்கிரேடோ St. Gerard Sargredo



பிறப்பு 980

இறப்பு 24 செப்டம்பர் 1046

புனிதர்பட்டம்: 1083, திருத்தந்தை 7 ஆம் கிரகோரி
பாதுகாவல்: ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு

இவர் கசானாட் (Csanad) என்ற மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில் உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில் கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும் பெரும் உதவியாளராக இருந்தார். இவர் ஹங்கேரியில் மலைப்பகுதியில் செல்லும்போது, அவர் சென்ற இரு சக்கர வண்டி கீழே சரிந்ததில், மலை உச்சியிலிருந்து விழுந்துள்ளார். அவர் கீழே பாதாளத்தில் விழுந்ததும் இறந்துவிட்டார் போல காணப்பட்டார். ஆனால் அவரின் உடலில் சிறிதும் அடிபடாமல் தன் கைகளை கூப்பி, தான் இறப்பதற்காக செபித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இவர் இறந்தப்பிறகு அம்மலையானது கில்லர்ட் ஹில் (Gillert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவர் இறக்கும் வரை வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.

No comments:

Post a Comment