Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 6 September 2015
இன்றைய புனிதர் 2015-09-06 புனித எல்யூடேரியஸ் St. Eleutherius
இறப்பு 585 உரோம், செயிண்ட் ஆண்ரூ ஆலயம் (St. Andrew’s Church, Rome)
இவர் அற்புதமான எளிமையான வாழ்வை வாழ்ந்தார். மனசாட்சியின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தூய ஆவியானவர் காட்டிய வழியில் சென்றார். ஸ்பொலேட்டோ (Spoleto) என்ற நகரிலிருந்த புனித மார்க்கின் துறவற மடத்தில் சேர்ந்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சில ஆண்டுகளில் துறவற மடத்திற்கு மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கடவுளின் அருளால் பல அற்புதங்களை செய்தார்.
இவர் தன் மடத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை ஆற்றினார். அப்போது ஒருநாள் சாத்தான் இவரை சோதிக்க வந்தது. ஆனால் இவரின் இறைபக்தியை கண்டு சாத்தான் பயந்து ஓடிவிட்டது. ஆனால் மீண்டும் சாத்தான் குழந்தையின் வடிவில் வந்து சோதித்தது. பின்னர் ஒரு குழந்தைக்குள் புகுந்தது. அக்குழந்தை சாத்தான் கடுமையாக தாக்கி, நோயை உண்டாக்கியது. இதனைக் கண்ட எல்யூடேரியஸ் மற்றும் அவரது குழும உறுப்பினர்களும் இணைந்து தவமிருந்தும் கடினமான நோன்பிருந்தும் செபித்தனர். இறைவேண்டலால் சாத்தானின் பிடியிலிருந்து குழந்தை விடுபட்டது. ஆனால் குழந்தை மிகவும் சோர்ந்து பலவீனத்துடன் காணப்பட்டது. சாகும்தறுவாயில் குழந்தை இருந்தது இதனால் அக்குழந்தையை எல்யூடேரியஸ் செயிண்ட் ஆன்ரூஸ் பேராலயத்திற்கு எடுத்து சென்றார்.
இவர் அப்பேராலயத்தில் கடின நோயிலிருந்து இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டு குழந்தையை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். அக்குழந்தை மீண்டும் புந்து உயிர்பெற்றது. அதிலிருந்து இவர் தொடர்ந்து கண்ணீர் வடித்து திருச்சபைக்காகவும், மக்களுக்காகவும் மன்றாடினார். வாழ்நாள் முழுவதும் நோன்பிலிருந்து பல அருள் கொடைகலை பெற்றார். அதிகமாக நோன்பிருந்ததால் உடல் முழுவதும் சக்தி இழந்து காணப்பட்டார். இதனால் தன் தலைவர் பதவியை விட்டு விலகி செபிப்பதில் மட்டுமே இறக்கும்வரை தன் வாழ்வை கழித்தார்
No comments:
Post a Comment