Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 26 September 2015

இன்றைய புனிதர் 2015-09-27 புனித வின்சென்ட் தெ பால் St.Vincent de Paul, Priest and Founder












பிறப்பு24 ஏப்ரல்1581,காஸ்கோனி(Gascony), பிரான்சு

இறப்பு27 செப்டம்பர் 1660,பாரீஸ், பிரான்சு

முத்திபேறுபட்டம்: 13 ஆகஸ்டு 1729, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூன் 1737, திருத்தந்தை 12 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: குதிரைகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர்கள், வின்சென்ட் தெ பால் சங்கங்கள்

இவர் ஓர் ஏழ்மையான கிராமத்தில் ஏழைப் பெற்றோர்களின் மகனாக பிறந்தார். பிரான்சிஸ்கன் சபையை சார்ந்த குருக்களின் பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் மிகவும் நன்றாக படித்ததால், பணம் எதுவும் பெறாமல், குருக்கள் இவரை படிக்க வைத்தனர். இதனால் தனது பெற்றோரின் சுமையை சிறிதளவு நீக்கினார். 1596 ஆம் ஆண்டு தூலூஸ் (Toulouse) என்ற நகரிலிருந்த பல்கலைக்கழகத்தில் தனது இறையியல் படிப்பை கற்கசென்றார். படிப்பை முடிந்ததும் 1600 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பிறகு 1605 ஆம் ஆண்டு தூனிஸிருந்து (Tunis) அடிமைகளாக கடத்திக் கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். அப்போது இவரும் அடிமையாக பிடித்துக்கொண்டு போகப்பட்டார். இரண்டு ஆண்டுகள் வின்செண்ட் அம்மக்களின் பிடியிலிருந்தார். பின்னர் இம்மானுவேல் டி கோண்டி(Emmanuel de Gondy) என்பவரிடமிருந்து, கடிதம் வரவே, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பிரான்சு நாட்டிற்கு திரும்பினார்.

1617 ஆம் ஆண்டு பிரான்சில் தனது மறைபரப்புப்பணியை தொடர்ந்தார். 1625 ஆம் ஆண்டு மிஷன்(Mission) அல்லது லாசரீஸ்ட்(Lazarists) என்ற பெயரில் சபையை நிறுவினார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கென்ற நோக்கத்தில், அவர் இச்சபையை நிறுவினார். பிறகு 1633 ஆம் ஆண்டில் மீண்டும் புனித லூயிஸ் தெ மரியாக் என்ற அம்மையாரின் ஒத்துழைப்புடன் "பிறரன்பு செவிலியர்" என்னும் துறவற சபையையும் தொடங்கினார். இச்சபைகளுக்கு தனது பள்ளி நண்பர்கள் முதல் ஏராளமானோரின் உதவியுடன் பல சட்டதிட்டங்கலை எழுதி, சபைகளை விரிவுபடுத்தி, ஏழைமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சபைகளை வளர்த்தெடுத்தார். ஏராளமான ஏழை மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டினார். ஏழை மாணவர்கல் பலர் கல்வியை கற்றனர். அவர் தொடங்கிய பணியானது, இன்றும் உலகின் எல்லாப்பகுதியிலும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment