Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 28 September 2015

இன்றைய புனிதர் 2015-09-29 அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல்


புனித மிக்கேல்

பாதுகாவல்: திவ்விய நற்கருணை, திருத்தந்தையரின் காவல் தூதர்

மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். விண்ணகத்தில் இறைதூதர்களின் நடுவே பிரச்சனைகள் ஏற்பட்டபோது, புனித மிக்கேல் தூதரின் தலைமையில் கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி குழப்பம் செய்த லூசிபர் சாத்தானையும் அதன் தோழர்களையும் நெருப்பில் தள்ளினார். நோயாளிகள், அதிதூதர் மிக்கேலின் பெயரைக் கூறி செபித்தால், நோய் நீங்கும் என்றும் ஆதிகாலத்திலிருந்து கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்ததும், அவர்களின் ஆன்மாவை சாத்தானிடமிருந்து விடுவித்து, தனித்தீர்வைக்கு இறைவனிடம் கொண்டு சேர்ப்பதை, தன் வேலையாக கொண்டு செயல்பட்டார் மிக்கேல்.

No comments:

Post a Comment