Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 7 September 2015
இன்றைய புனிதர் 2015-09-08 புனித பீட்டர் கிளேவர், St. Peter Claver குரு
பிறப்பு 26 ஜூன் 1580, ஸ்பெயின்
இறப்பு 8 செப்டம்பர் 1654
இறப்பு 8 செப்டம்பர் 1654
முத்திப்பேறுபட்டம்: 16 ஜூலை 1851 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888 திருத்தந்தை 13 ஆம் லியோ பாதுகாவல்: அடிமைகள் மற்றும் கொலம்பியா நாட்டின் பாதுகாவலர் கிளேவர் சிறு வயதிலிருந்தே அன்னைமரியாளின் மீது பக்தியை வளர்த்து வந்தார். பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து பல புத்தகங்களைப் படித்தார். தனது இளம் வயது படிப்பை முடித்தபின் 1596 ஆம் ஆண்டு பார்சலோனா என்ற நகரிலிருந்த புகழ் வாய்ந்த கல்லூரியில் படிக்க சென்றார். கல்லூரி படிப்பை முடித்ததும் 1802 ஆம் ஆண்டு குருவாக ஆசைக்கொண்டு இயேசு சபையில் சேர்ந்தார்.
இவர் மயோர்க்கா நகரில் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கல்லூரி படிப்பை முடித்தபின் 1616 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். புதிய குருவான இவர் நீக்ரோ அடிமை மக்களிடம் பணியை தொடர அனுப்பப்பட்டார். அம்மக்களிடையே சிறப்பாக பணியாற்றி , சில நாட்கள் கழித்து, அவர்களில் ஒருவராகவே மாறினார். அப்போது அம்மக்களிடையே அடிமை வாணிகம் பெருகியது. அவற்றை ஒடுக்க இவர் பெரிதும் பாடுபட்டார். அச்சமயத்தில் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து மக்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களோடு சேர்த்து இறக்குமதியும் செய்யப்பட்டது. கிளேவர் அம்மருந்துகளை பெற்று, நீக்ரோ மக்களுக்கு மருத்துவப் பணியையும் ஆற்றினார். அடிமை மக்களிடையே மிகவும் அன்பாக பணியாற்றினார். தனது மறைப்பணியால் அம்மக்களின் கடுமையான மனதை மாற்றினார். அனைவரையும் இறைவன்பால் ஈர்த்து, இறையுறவில் வளர்த்தெடுத்தார். அடிமைகளின் மேல் கொண்ட அக்கறையாலும், அன்பாலும் இவர் அம்மக்களின் தந்தை என்றழைக்கப்பட்டார். புனிதர்பட்டம்: 15 ஜனவரி 1888 திருத்தந்தை 13 ஆம் லியோ பாதுகாவல்: அடிமைகள் மற்றும் கொலம்பியா நாட்டின் பாதுகாவலர்
No comments:
Post a Comment