Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 21 September 2015
இன்றைய புனிதர் 2015-09-21 திருத்தூதர் மத்தேயு, நற்செய்தியாளர் St. Matthew, Apostle and Evangelist
பிறப்பு முதல் நூற்றாண்டு,கப்பர்நாகூம், பாலஸ்தீனா
இறப்பு முதல் நூற்றாண்டு,எத்தியோப்பியா
பாதுகாவல்: சலேர்நோ மறைமாவட்டம், வங்கிகள், வங்கிப் பணியாளர்கள்
இவர் சுங்கத்துறையில் பணி செய்தவர். நற்செய்தியை எழுதியவர். இயேசுவால் சீடராக அழைக்கப்பட்டவர். இவர் கீழை நாடுகளில் திருமறையை போதித்ததாக கூறப்படுகின்றது. மத்தேயு என்ற பெயருக்கு, யாவேயின் அருங்கொடை என்பது பொருள். மத்தேயு, இயேசு கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கையை எழுதி நற்செய்தியாக வடிவமைத்தார். இவர் அல்பேயுவின் மகன்.
மத்தேயு தனது திருத்தூதர் பணியை பாலஸ்தீனாவில் மட்டும் செய்ததாக சொல்லப்படுகின்றது. இவரின் வாழ்வை பற்றிய விவரங்கள் அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் அமைதியான முறையில் இறந்து, மறைசாட்சிகளுக்குரிய கிரீடத்தை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment