Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 26 September 2015

இன்றைய புனிதர் 2015-09-26 கோஸ்மாஸ், தமியான் St. Cosmas and Damian மறைசாட்சியர் & மருத்துவர்கள்


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,சிரியா

இறப்பு287,அகேயா, சிரியாவின் ரோமானிய மாநிலம்

பாதுகாவல்: அறுவை சிகிச்சை, மருத்துவர்கள், முடி திருத்துவோர், கால்நடை மருத்துவர்கள்

கோஸ்மாஸ், தமியான் இவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள். இருவரும் அறிவியலும், மருத்துவமும் பயின்றவர்கள். இவர்கள் பணி செய்தபோதும், மக்களை குணப்படுத்தியபோதும், சிறிதளவு பணம் கூட பெறாமல் பணியாற்றினர். சிலிசியாவிலுள்ள(Cilicia) எகாயா(Egaea) என்ற ஊரில் தொண்டாற்றும்போது, மக்களிடையே சிறப்பான பணியாற்றினர். அம்மக்களிடையே வாழ்வதில் இவர்கள் பெரும்மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையினால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். இதனால் பொறாமைக்கொண்ட தியோக்ளேசியன்(Diocletian) என்பவன் இருவரையும் பிடித்துச் சென்று துன்புறுத்தினான். பின்னர் சிலிசியா நாட்டு ஆளுநர் லிசியஸ்(Lysias) என்பவனிடம் இருவரையும் ஒப்படைத்தான். அங்கு அவன் இருவரையும் சிறையிலடைத்து, துன்புறுத்தி, இறுதியில் இருவரின் தலையையும் வெட்டி கொன்றான்.

இவர்களின் பெயரால் உரோமையில் பல ஆலயங்கள் உள்ளது. திருச்சபையில் இவர்களின் பெயரால் பல மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது மிகத் தொன்மை வாய்ந்த நினைவுக்குறிப்புகளில், இவர்களின் கல்லறை சிரியாவில் சைர் என்னுமிடத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு இவர்களின் பெயரால் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. இப்புனிதர்களின் பக்தி அங்கிருந்து உரோம் வந்தடைந்தது. பின்னர் தான் திருச்சபை முழுவதும் பரவியது என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment