Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 22 September 2015

இன்றைய புனிதர் 2015-09-23 புனித தெக்ளா St. Thecla


பிறப்பு 1 ஆம் நூற்றாண்டு, இக்கோனியன் Ikonion, துருக்கி

இறப்பு 1 ஆம் நூற்றாண்டு

பாதுகாப்பு: இறப்பு நிலையில் உள்ளவர்கள், கண்நோய்கள், தீ விபத்து, கொள்ளை நோய்கள்

இவர் 2 ஆம் நூற்றாண்டில் புகழ்வாய்ந்தவராக கருதப்படுகின்றார். புனித பவுலின் வாழ்க்கையை பற்றி பறைசாற்றியுள்ளார். தியாமிரீஸ் Thamyris என்பவருடன் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்ததை அறிந்த இவர், தன் கன்னிமையை காத்துக்கொள்ள அவரிடமிருந்து தப்பித்து சென்றார். பவுலை பற்றி தீர்க்கமாக போதித்ததால் எரித்து கொல்லப்பட உத்தரவிடப்பட்டது. இவர் பலமுறை, பவுலைப் போலவே, சாட்டையடிகளையும் பெற்றுள்ளார். இருப்பினும் கிறிஸ்துவை பவுலின் வாழ்க்கை வழியாக பரப்புவதில் இவரின் மனம் கொழுந்துவிட்டு எரிந்தது. போதனைப் பணியை தொடர்ந்ததால் சிரியாவை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர், இவரை நாடு கடத்தி சென்றார். அங்கு கொடிய காட்டு மிருகங்களின் நடுவே, அவரை விட்டான். ஆனால் அந்த மிருகங்கள் ஒன்றும் செய்யாமல்விட்டது. பின்னர் அங்கிருந்து தப்பி லிசியாவிலுள்ள (Lycia) மிரா (Myra) என்ற பகுதிக்கு சென்றார்.

அப்பகுதியிலும் மறைப்பரப்புப் பணியை செய்தார். பின்னர் செலிசியா(Seleucia) என்ற நகரிலிருந்த மேரியாம்லிக்(Meriamlik) என்ற ஊரில் ஓர் குகையில் தங்கி புனித பவுல் சபையில் சேர்ந்து துறவியானார். 72 ஆண்டுகள் அங்கு துறவியாக வாழ்ந்து இறந்தார். இவரது உடல், புனித பவுலின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கிறிஸ்துவைப் பற்றி போதிப்பதில், புனித பவுல் அடிகளாரை போலவே இவர் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment