Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 7 September 2015

இன்றைய புனிதர் 2015-09-07 புனித கிளவுட் St.Cloud


பிறப்பு 522 வெசைலஸ்(Versailles), பிரான்சு

இறப்பு 560

பாதுகாவல்: மின்னசோட்டா(Minnesota) மறைமாவட்டம் மற்றும் ஆணி தயாரிப்போர்க்கு பாதுகாவலர்

கி.பி. 511 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசர் இறந்தார். இதனால் அவரின் 4 மகன்களும் யார் நாட்டை ஆட்சி செய்வது என்ற போட்டி எழுந்தது, அப்போது அரசனின் 2 ஆவது மகன் (Clodomir) நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். 13 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தனது உறவினர் ஒருவர் இவரிடம் சண்டையிட்டு அவரைக் கொன்றான். அதன்பிறகு மற்ற 3 சகோதரர்களும் தந்தையின் சொத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டனர். அவர்களில் கடைசியானவர்தான் புனித குளோடோவால்டு(ST.Clodoald) என்பவர். இவர் ஆங்கிலேயர்களால் கிளவுட் என்றழைக்கப்பட்டார். அவரின் வயது அப்போது எட்டு. இதனால் தனது மாமாவின் பிடியில் வளர்ந்தார்.

கிளவுட்டை தன்னுடன் வைத்துக்கொண்டு, மாமா மற்ற 2 சகோதரர்களையும் கொன்றார். இதையறிந்த கிளவுட் மாமாவிடமிருந்து தப்பி சென்றார். தான் வளர்ந்த பிறகு, மீண்டும் தன் மாமாவிடமிருந்த தன் அண்ணன்கள் சொத்து அனைத்தையும் சண்டையிட்டு பெற்று நாட்டை ஆட்சி செய்தார். ஆட்சி செய்தபோதும், புனித் செவெரீனூஸ்(Severinus) பாதையில் தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். தனது அரச சொத்துக்கள் அனைத்தையும் விற்று, தன் நாட்டிலிருந்த ஏழைகளுடன் பகிர்ந்தார். தன் அண்டை நாட்டிற்கும் உதவி செய்தார். பலரின் வாழ்வில் ஒளியேற்றியப்பின் ஒன்றுமில்லாதவராய் இறைவனை மட்டுமே சொத்தாகக் கொண்டார். பின்னர் இறைவனை இதயத்தில் ஏற்றவராய் தனது 36 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment