Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 1 September 2015

இன்றைய புனிதர் 2015-09-01 துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius)


பிறப்பு ஏழாம் நூற்றாண்டு,ஏதென்ஸ்(?), கிரேக்கம்
இறப்பு 01 செப்டம்பர் 710 / 720,பிரான்ஸ்
பாதுகாவல்: பிச்சைக்காரர்கள், புற்று நோயாளிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், வலிப்பு, மன நோயாளிகள்

இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கில்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார். இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார்.

அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார். இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார்.

கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது. இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது.




No comments:

Post a Comment