Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 10 September 2015

இன்றைய புனிதர் 2015-09-11 புனித பாப்னுடீயஸ், St.Paphnutius, Bishop ஆயர்

இவர் பல ஆண்டுகள் பாலைவனத்தின் வாழ்ந்தார். பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு எகிப்து நாட்டில் ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மறைமாநில மக்கள் பாவமன்னிப்பு பெற வேண்டுமென்று விரும்பினார். இதன் வழியாக அமைதியை நிலை நாட்ட எண்ணினார். அதற்காக பெரிதும் உழைத்து, தம் மந்தையை மனந்திருப்பினார். பின்னர் தம் மக்களை நல்ல கிறிஸ்துவர்களாக வளர்த்தெடுத்தார். பல பாவமன்னிப்பு வழிபாடு வழங்கி , மக்களின் மனதை முழுவதுமாக இறைவன் பால் திருப்பினார்.


அப்போது 325 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டின்(Constantine) என்ற அரசன் ஓர் கூட்டத்தை கூட்டினான். ஆயர் பாப்னுடீயஸை அக்கூட்டத்திற்கு வரவழைத்தான். தனக்கு தனிபட்ட முறையில் அனைவர் முன்னிலையிலும் மரியாதை அளிக்கும்படி ஆயரிடம் கட்டளையிட்டார்ன். ஆனால் ஆயர் அதை செய்ய மறுத்தார். இதனால் அரசன் கோபங்கொண்டு ஆயரின் வலது கண்ணை பிடுங்கி எரிந்தான். அக்கூட்டத்தில் திருச்சபைக்காக தன் கண்ணை இழந்தார் ஆயர். ஒரு கண்ணைக் கொண்டே 355 ஆம் ஆண்டு மீண்டும் தொழிற்சங்கக் கூட்டத்திற்கு வந்தார். அப்போதுதான் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார்.

No comments:

Post a Comment