Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 27 September 2015

இன்றைய புனிதர் 2015-09-28 மறைசாட்சி வென்செஸ்லாஸ் St. Wenseslaus



பிறப்பு904 / 907,போஹேமியா( Bohemia), ப்ராக் (prague)

இறப்பு929 / 935,பொலேஸ்லேவில்(Boleslew), போஹேமியா(Bohemia)

பாதுகாவல்: போஹூமியா, பிராக் நாட்டின் பாதுகாவலர்

இவர் ராடிஸ்லா(Duke Wratislaw) என்பவரின் மகன். புனித லூட்மிலா(St. Ludmila) என்பவர் இவரின் பாட்டியாவார். இவர் பாட்டியின் வழியாகத்தான் வென்செஸ்லாஸ் கிறிஸ்துவை பற்றி அறிந்திருந்தார். மாக்கியர்கள்(Magyars) டிராஹோமிரா(Drahomira) என்பவருடன் சேர்ந்து, புனித லூட்மிலாவை கொன்றார்கள். அத்தோடு அவரின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். அதன்பிறகு 922 ஆம் ஆண்டு வென்செஸ்லாஸ் மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவர் தனது மாநிலத்தில் கிறிஸ்துவத்தை, ஊக்குவித்து வளர்த்தார். இதனால் அவர் சகோதரன், பொலஸ்லாஸ் (Boleslaus) தம்பியின் மீது பொறாமைக்கொண்டு, ஆட்சியை அவரிடமிருந்து பறிக்க முயன்றான். தன் சகோதரனால் வென்செஸ்லாஸ் பல இடையூறுகளை எதிர்கொண்டார்.
இருப்பினும் பொலஸ்லாஸ், வென்செஸ்லாசை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தான். பொலஸ்லாஸ் தன் தம்பிக்கு விருந்தொன்றை ஏற்பாடு செய்தான். அன்பாக தம்பியிடம் பேசி, அவ்விருந்துக்கு, அவரை அழைத்து வந்தான். தம்பியை விருந்துக்குமுன் திருப்பலிக்கு செல்லலாம் வா என்று கூறி தன்னுடன் அழைத்து சென்று கொலைக்காரர்களின் கையில் ஒப்படைத்தான். அக்கொலைக்காரர்கள் அவரை, தங்களின் வெறி தீர்க்கக் கொன்றார்கள். அவர் இறந்த உடனே, அம்மாநில மக்களால் மறைசாட்சியாக கருதப்பட்டார். இவரே அவ்வூரின் முதல் மறைசாட்சியாவார். வென்செஸ்லாஸ் தனது சிறு வயதிலிருந்தே நற்கருணையின்மீது பக்தி கொண்டு வளர்ந்தார். இவர் இறந்த இந்நாள் செக் குடியரசின், தேசிய விடுமுறை நாளாக உள்ளது.

No comments:

Post a Comment