Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 21 September 2015

இன்றைய புனிதர் 2015-09-22 மறைசாட்சிகள் மவுரிசியஸ் மற்றும் தோழர்கள் St. Mauritius and companions


பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, எகிப்து

இறப்பு 302,அகாவ்னும் Agaunum (செயிண்ட் மௌரிஸ் St. Maurice),சுவிட்சர்லாந்து

பாதுகாவல்: போர் வீரர்கள், வியாபாரிகள், சாயத் தொழிலாளிகள், ஆடை நிறுவனங்கள், காது, மூட்டு நோய்களிலிருந்து

இவர் எகிப்து நாட்டில் முதன்முதலில் இராணுவப் படையை உருவாக்கினார். இவர், தன் படைவீரர்களுடன் சேர்ந்து சிலுவைப்போரை புரிந்தனர். இவரின் படைவீரர்களை, தன் படைக்கு கொடையாக தருமாறு, எதிர்படையினர், மவுரிசியஸிடம் கேட்டனர். அப்படி தந்தால் வெற்றியடைய செய்வோம் என்றும் கூறினர். ஆனால் மவுரிசியஸ் இதனை ஏற்க மறுத்தார். இதனால் மீண்டும் போர் மூண்டது. மவுரிசியசின் படையிலிருந்த படைவீரர்கள் சிலரின் அந்த செயல்களால், மவுரிசியஸ், அப்படையை விட்டு விலக வேண்டியதாயிற்று. இவர் அப்படையிலிருந்து விலகியப்பின் படைவீரர்கள் மிகக் கடினமான ஒழுங்குகளை கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டார்கள். இதனை கடைபிடிக்க மறுத்ததால், பலம் வாய்ந்த வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இராணுவவீரர்கள் 6000 பேர், மாக்சிமில்லியனுடன் (Maxmilian) சேர்ந்து, ஜெனிவா என்ற ஏரியின் அருகே எதிரிகளுடன் போரிட்டனர். இப்போரில் மீண்டும் பலர் இறந்தனர்.

இதனால் இராணுவத்தில் மிகக்குறைவான பலம் வாய்ந்த வீரர்களே இருந்தனர். இவற்றை கண்ட மவுரிசியஸ், மீண்டும் இராணுவத்தில் நுழைந்தார். இராணுவ வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்தார். வீரர்களை மீண்டும் திடப்படுத்தி பலமூட்டினார். அத்துடன் அவர்களுக்கு கிறிஸ்துவ நெறியை கற்பித்து நல்ல கிறிஸ்துவர்களாகவும் வாழ வைத்தார். இந்நிலையில் எதிரிகள் மீண்டும் படையெடுத்து வந்து மவுரிசியசையும் அவரின் படைவீரர்களையும் கொன்றார்கள்

No comments:

Post a Comment