பிறப்பு 1542,தஸ்கனி(Tuscany), மோந்தே புல்சியானோ(Monte Pulciano)
இறப்பு 17 செப்டம்பர் 1621, உரோம் முத்திபேறுபட்டம்
1923புனிதர்பட்டம்: 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச் சபையை பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங் களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறை யியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |
பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும் சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும், தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார்.
No comments:
Post a Comment