Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 19 September 2015

இன்றைய புனிதர் 2015-09-19 காண்டர்பரி பேராயர் தியோடர் Theodar


பிறப்பு 602, தார்சுஸ் Tarsus, துருக்கி

இறப்பு 19 செப்டம்பர் 690, காண்டர்பரி Canterbury, இங்கிலாந்து

இவர் இங்கிலாந்து நாட்டில் கேண்டர்பரி நகரில் ஆயராக இருந்தார். இவருக்கு இங்கிலாந்து நாட்டில் பெரிய பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இவர் தனது சொந்த ஊரான தர்சிலும், துருக்கி, கிரேக்கத்திலும் கல்லூரி படிப்பை ஏதென்ஸ் நாட்டிலும் கற்றார். பின்னர் உரோம் சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் 667 ஆம் ஆண்டில் திருத்தந்தை வித்தாலியன் (Vitalian) அவர்களால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் 668 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா நாட்டிலுள்ள பழங்குடி மக்களுக்கு பணியாற்ற பொறுப்பேற்றார். அப்போது ஆப்ரிக்காவை ஆண்டுவந்த கேண்டர்பரி மன்னனை எதிர்த்தார். 669 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பி உயர் பதவி வகித்த மன்னன் இவருக்கு உதவினார். பின்னர் 673 மற்றும் 680 ஆண்டுகளில் இரண்டுமுறை Synod- ஐ கூட்டினார். இவர் இங்கிலாந்து நாட்டின் முதல் பேராயர் என்ற பெயர் பெற்றார்.

No comments:

Post a Comment