Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 24 September 2015

இன்றைய புனிதர் 2015-09-25 புனித ஜியோன்னா ஆல்பர்ட் St. Albert of Geona


பிறப்பு 1149, பார்மா (Parma), இத்தாலி

இறப்பு 1215, பாலஸ்தீனா

பாதுகாவல்: கார்மேல் சபை

ஆல்பர்ட் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தார். திருச்சிலுவை(Holy Cross) என்ற சபையில் குருவானார். 1184 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள பிப்பியோ (Bibbio) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1205 ஆம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்துவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்துவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். 1187 ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார். அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்துவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கையில் அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ வழிவகுத்தார்.

பேரரசர் பிரடெரிக் பர்ப்ரோச்சா (Frederick Babbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும் திருத்தந்தை 2 ஆம் கிளமெண்ட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப் புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக மாற்றினார்.

ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ Akko என்ற இடத்திற்கு மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது. அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார். துறவிகள் தனித்தனி குகைகளிலும், செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார். 1209 ஆம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார்.

அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து வாழ வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க துறவிகளை தூண்டினார்.

1254 ஆம் ஆண்டு திருத்தந்தை 4 ஆம் இன்னொசெண்ட் அவர்கள், இவர் எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ, அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில் நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து வெளியேறியபின் புனித திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment