Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 2 January 2016
இன்றைய புனிதர் 2016-01-02 ஆயர் மறைவல்லுநர் நசியான்ஸ் நகர் கிரகோரியர் Gregor von Nazianz
பிறப்பு330, நெசினி Nenisi, துருக்கி
இறப்பு 390,நெசினி நகர்
பாதுகாவல்: கவிதை எழுதுபவர், நல்ல அறுவடை இவர் தனது 10 ம் வயதில் தன்னுடன் பயின்ற பசிலியுஸ் Basilius என்ற மாணவருடன் நண்பரானார். இவர்கள் இருவரும் சிற ந்ததொரு எடுத்துக்காட்டான நெருக்கமான நண்பர்களானா ர்கள். இவர் 360 ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்று சிறந்த கிறி ஸ்தவராய் வாழ்ந்தார். பின்னர் 372 ஆம் ஆண்டு குருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஆயராகப் பொறுப்பேற்று மறைப்ப ணியாற்றினார். அவரின் தந்தை 374 ஆம் தந்தையின் சொத்து க்கள் அனைத்தையும் மறைமாவட்டத்திற்குப் பரிசாகக் கொடு த்தார். பின்னர் 381 ஆம் ஆண்டு தனது இருப்பிடத்தை கான்ஸ் டாண்டிநோபிளுக்கு மாற்றினார்.
இவர் அங்கு பல கருத்தரங்குகளை ஏற்படுத்தி திருச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் கல்வி செல்வங்களை திரட்டும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். ஆழ்ந்த இறை நம்பிக்கையும் பேச்சுத்திறனும் கொண்டு திருச்சபைக்காக பெரிதும் உழைத்தார். இவர் தனது மறைமாவட்டத்தில் தோன்றிய பிளவுகளின் காரணமாக தம் சொந்த நகராகிய நெசினிக்கு திரும்பி இறைவனில் வேரூன்றி வாழ்ந்து அவ்வூரிலேயே இறந்தார்.
செபம்: அன்பே உருவான இறைவா! புனித கிரிகோரியாரின் வாழ்வால் நீர் உமது திருச்சபையை வளமுற செய்தீர். அவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் தந்தீர். நாங்கள் தாழ்மையுடன் உமது அன்பைப் பெற்று நம்பிக்கையுடனும் அன்புடனும் வாழ எங்களுக்கு அருள்புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment